Acquiring Perseverance

“The Lord your God will drive out those nations before you, little by little. You will not be allowed to eliminate them all at once, or the wild animals will multiply around you.” Deuteronomy 7:22.

We are not to expect to win victories for the Lord Jesus by a single blow. Evil principles and practices die hard. In some places it takes years of labor to drive out even one of the many vices which defile the inhabitants. We must carry on the war with all our might, even when favored with little manifest success.

Our business in this world is to conquer it for Jesus. We are not to make compromises but to exterminate evils. We are not to seek popularity but to wage unceasing war with iniquity. Infidelity, popery, drink, impurity, oppression, worldliness, error; these are all to be “put out.”

The Lord our God can alone accomplish this. He works by His faithful servants, and blessed be His name. He promises that He will so work. “Jehovah thy God will put out those nations before thee.” This He will do by degrees that we may learn perseverance, may increase in faith, may earnestly watch, and may avoid carnal security. Let us thank God for a little success and pray for more. Let us never sheathe the sword till the whole land is won for Jesus.

Courage, my heart! Go on little by little, for many littles will make a great whole.

விடாமுயற்சியை அடைதல்

அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்தி விடுவார். உபா.7:22.

நாம் ஒரு தாக்குலிலேயே நம் ஆண்டவராகிய இயேசுவுக்கு வெற்றி பெற்று விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. கெட்ட ஒழுக்க முறை விதிகளும் பழக்கங்களும் எளிதில் ஒழிந்து போவதில்லை. மக்களின் மத்தியில் காணப்படும் ஒரு தீய பழக்கத்தைக்கூட நீக்கிவிட சில இடங்களில் பல ஆண்டுகள் ஆகின்றன. வெளிப்படையான வெற்றி காணப்படாவிட்டாலும் நாம் முழு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும்.

இவ்வுலகில் நம் வேலை ஆண்டவருக்கென்று அதை வெல்வதேயாகும். நாம் தீமைகளோடு சமரசம் செய்யாமல் அவற்றை வேரோடு அழித்துவிட வேண்டும். நாம் பொது மக்களிடையே மதிப்பைத் தேடாமல் அக்கிரமத்தை எதிர்த்து விடாமுயற்சியுடன் போர் புரிய வேண்டும். நம்பிக்கையின்மை, குடிப்பழக்கம், தூய்மைக்கேடு, மற்றவர்களை ஒடுக்குதல், உலகப்பற்று, தவறு இவற்றையெல்லாம் நிலை பெயரச் செய்ய வேண்டும்.

நம் ஆண்டவராகிய தேவனே இதைச் செய்ய முடியும். அவர் தம் உண்மையுள்ள ஊழியக்காரர் மூலமாய் செயல்ப்படுகிறார். அவர் நாமம் மகிமைப்படுவதாக! அவ்விதம் செயல்ப்படுவதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர்……உன்னை விட்டுத் துரத்தி விடுவார். நாம் விடாமுயற்சியைக் கற்றுக் கொள்ளவும் நம்பிக்கையில் வளரவும் மெய்யார்வத்துடன் கவனிக்கவும் உடல் இன்பத்திற்குரிய கவலையற்ற தன்மையைத் தவிர்க்கவும் அவர் கொஞ்சம் கொஞ்சமாகவே அதைச் செய்வார். நமக்குக் கிடைத்திருக்கும் சிறு வெற்றிகளுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லி இன்னும் அதிகத்திற்காக வேண்டிக் கொள்வோமாக! எல்லா இடங்களையும் இயேசுவுக்காக வெற்றி உடைமையாகக் கைக்கொள்ளு முன், நம் பட்டயத்தை உறையில் போடாமல் இருப்போமாக!

என் இதயமே, திடன்கொள், சிறிது சிறிதாக முன்னேறு. சிறியவை பல சேர்ந்தே பெரிய முழுமை ஆகிறது.

Charles H. Spurgeon