“And the God of peace shall bruise Satan under your feet shortly.” Romans 16:20.
This promise follows well upon that of yesterday. We are evidently to be conformed to our covenant Head, not only in His being bruised in His heel but in His conquest of the evil one. Even under our feet is the old dragon to be bruised. The Roman believers were grieved with strife in the church; but their God was “the God of peace” and gave them rest of soul. The archenemy tripped up the feet of the unwary and deceived the hearts of the simple; but he was to get the worst of it and to be trodden down by those whom he had troubled. This victory would not come to the people of God through their own skill or power; but God Himself would bruise Satan. Though it would be under their feet, yet the bruising would be of the Lord alone.
Let us bravely tread upon the tempter! Not only inferior spirits but the prince of darkness himself must go down before us. In unquestioning confidence in God let us look for speedy victory. “Shortly.” Happy word! Shortly we shall set our foot on the old serpent! What a joy to crush evil! What dishonor to Satan to have his head bruised by human feet! Let us by faith in Jesus tread the tempter down.
மேற்கொண்டு வெற்றியடைதல்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார் (ரோ.16:29).
நேற்று ஆராய்ந்த வாக்குறுதியை இது சிறப்பாகத் தொடர்கிறது. குதிக்காலில் காயம் அடைவது மட்டுமல்லாமல் தீயவனை மேற்கொள்வதிலும் நாம் நம் உடன்படிக்கையின் தலைவரை ஒத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய்த் தெரிகிறது. பழைய வலுசர்ப்பம் நம் கால்களின் கீழேயும் நசுக்கிப் போடப்படும். ரோமாபுரியில் இருந்த விசுவாசிகள் அவர்கள் சபையில் ஏற்பட்டிருந்த சச்சரவுகளினால் துயரம் அடைந்திருந்தார்கள். ஆனால் சமாதானத்தின் கடவுளான அவர்கள் கடவுள் அவர்கள் ஆன்மாவுக்கு இளைப்பாறுதல் அளித்தார். தந்திரமான எதிரி விழிப்பாய் இராதவர்களின் கால்கள் தடுமாறவும், ஆவியில் எளியவர்களின் இதயம் ஏமாற்றம் அடையவும் செய்வான். ஆனால் அவனோ தோல்வியடைவான். அவன் துன்பம் கொடுத்தவர்களின் கால்களால் மிதிக்கப்படுவான். கடவுளின் மக்களுக்கு ஏற்படும் இந்த வெற்றி அவர்கள் சொந்தத் திறமையினால் அல்லது ஆற்றலினால் ஏற்படாது. அவன் அவர்கள் கால்களின் கீழே நசுக்கப்பட்டாலும் அது கடவுளாலேயே நிறைவேறும்.
நாம் தைரியமாகச் சோதனைக்காரனை மிதித்துப் போடுவோமாக. இழிவான ஆவிகள் மட்டுமல்லாமல் இருளின் அதிபதியும் நம்மால் தோல்வியடைவான். நாம் சந்தேகப்படாமல் கடவுளின் மேல் உறுதியான நம்பிக்கை வைத்து, சீக்கிரம் கிடைக்கப் போகும் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்போமாக! சீக்கிரம் என்பது மகிழ்ச்சி அளிக்கும் சொல்லாகும். சீக்கிரத்தில் நாம் பழைய பாம்பை மிதித்துப்போடுவோம். தீமையை நசுக்கிப் போடுவது எவ்வளவு மகிழ்ச்சி அளிப்பதாகும்! சாத்தானுக்கு அவன் தலை மனிதரின் கால்களால் நசுக்கப்படுவது எவ்வளவு மானக்கேடாகும். இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையினால் சோதனைக்காரனை மிதித்துப் போடுவோமாக!
Charles H. Spurgeon