“And a highway will be there; it will be called the Way of Holiness; it will be for those who walk on that Way. The unclean will not journey on it; wicked fools will not go about on it.” Isaiah 35:8.
The way of holiness is so straight and plain that the simplest minds cannot go astray if they constantly follow it. The worldly wise have many twists and turns, and yet they make terrible blunders and generally miss their end. Worldly policy is a poor, shortsighted thing, and when men choose it as their road, it leads them over dark mountains. Gracious minds know no better than to do as the Lord bids them; but this keeps them in the King’s highway and under royal protection.
Let the reader never for a moment attempt to help himself out of a difficulty by a falsehood or by a questionable act; but let him keep in the middle of the high road of truth and integrity, and he will be following the best possible course. In our lives we must never practice circular sailing nor dream of shuffling. Be just and fear not, Follow Jesus and heed no evil consequences. If the worst of ills could be avoided by wrongdoing, we should, in the very attempt, have fallen into an evil worse than any other ill could be. God’s way must be the very best way. Follow it though men think you a fool, and you will be truly wise.
Lord, lead Thy servants in a plain path because of their enemies.
அரசரின் நெடுங்சாலை
அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசை கெட்டுப்போவதில்லை. ஏசா 35:8.
பரிசுத்தத்தின் பாதை நேராகவும் தெளிவாகவும் இருக்கிறபடியால் பேதையர்கூட தொடர்ந்து அந்த வழியே போனால் திசை கெட்டுப்போவதில்லை. உலகப் பிரகாரமான ஞானம் உள்ளவர்கள் பல வளைவுகளையும் திருப்பங்களையும் கடந்து சென்றாலும் பயங்கரமான பிழைகளில் மாட்டிப் பொதுவாக வழியைத் தவறவிடுகிறார்கள். உலகப் பிரகாரமான போக்கு குறைபாடுடையதும் குறு நோக்கம் உடையதுமாகும். மக்கள் அதைத் தாங்கள் செல்லும் வழியாகத் தெரிந்துகொண்டால் இருண்ட மலைகள் வழியாக அவர்கள் செல்லவேண்டியதிருக்கும். அறிய ஆர்வமுடைய மனதுடையவர்கள் ஆண்டவர் கட்டளைப்படி செய்வதையே அறிவார்கள். இதனால் அரச பாதுகாப்புடன் அரசரின் நெடுஞ்சாலையில் இவர்கள் நடந்து செல்கிறார்.
இதை வாசிப்பவர் இடுக்கண் அடையும்போது அதிலிருந்து விடுபட ஒருபோதும் பொய் சொல்லாமலும் முற்றிலும் நேர்மையாய் இராத செயல் செய்யாமலும் இருப்பது அவசியம். அவர் முற்றிலும் உண்மையும் நேர்மையும் ஆன நெடுஞ்சாலையில் சென்றால் சிறந்த பாதையில் செல்பவர் ஆவார். நம் வாழ்க்கையில் ஒருபோதும் சுற்றி வளைத்துப் போகாமல் நிலைபிறழ்வதைக் குறித்து எண்ணாமலும் இருப்பது அவசியம். நீதியாய் நடந்து அச்சமின்றி இருங்கள். இயேசுவைப் பின்பற்றி எந்தத் தீய விளைவுகளையும் பொருட்படுத்தாமல் இருங்கள். தவறு செய்வதால் பயங்கரமான கேடு நம்மைத் தாக்காமல் இருப்பதைத் தடுக்க முயன்றோமேயானால் அந்த முயற்சியிலேயே பயங்கரமான எந்தக் கேட்டையும் விடத் தீமையானதொன்றிற்குள் சிக்கிவிடுவோம். கடவுளின் பாதையே சிறந்ததாயிருக்கும். அந்த வழியில் நடக்க கவனமாயிருங்கள். மக்கள் உங்களைப் பேதைகள் என்று நினைத்தாலும் நீங்கள் மெய்யாகவே ஞானம் உள்ளவர்களாய் இருப்பீர்கள்.
ஆண்டவரே, உம் அடியார்களை அவர்கள் எதிரிகளிலிருந்து காப்பாற்ற சிக்கலற்ற பாதையில் நடத்தும்.
Charles H. Spurgeon