“Whoever is kind to the poor lends to the Lord, and he will reward them for what they have done.” Proverbs 19:17.
We are to give to the poor out of pity. Not to be seen and applauded, much less to get influence over them; but out of pure sympathy and compassion we must give them help.
We must not expect to get anything back from the poor, not even gratitude; but we should regard what we have done as a loan to the Lord. He undertakes the obligation, and, if we look to Him in the matter, we must not look to the second party. What an honor the Lord bestows upon us when He condescends to borrow of us! That merchant is greatly favored who has the Lord on his books. It would seem a pity to have such a name down for a paltry pittance; let us make it a heavy amount. The next needy man that comes this way, let us help him.
As for repayment, we can hardly think of it, and yet here is the Lord’s note of hand. Blessed be His name, His promise to pay is better than gold and silver. Are we running a little short through the depression of the times? We may venture humbly to present this bill at the bank of faith, Has any one of our readers [oppressed] the poor? Poor soul. May the Lord forgive him.
கடவுள் கைம்மாறு செய்வார்
ஏழைக்கு இரங்ககிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் (நீதி.19:17).
நாம் ஏழைகள்மேல் இரக்கப்பட்டு, அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதை மற்றவர்கள் பார்த்து, பாராட்டுவதற்காக அல்ல. அவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் அல்ல. பரிவினாலும், இரக்க உணர்ச்சியினாலும் மட்டுமே. அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.
ஏழைகளிடமிருந்து நாம் எந்தக் கைம்மாறும் எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் நன்றியுள்ளவர்களாய் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் அவர்களுக்குக் கொடுத்ததை ஆண்டவருக்குக் கொடுத்த கடனாக எண்ணவேண்டும். நன்றிக்கடன் செலுத்துவதைஅவர்தம் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறார். அதை அவர் செய்வார் என்று நாம் எதிர்பார்த்தால் ஏழைகளிடமிருந்து கடன் வாங்கும்போது நம்மை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார் என்பதை நினைத்துபஇ பாருங்கள். பற்று வரவுக் கணக்கில் ஆண்டவரின் பெயரைப் பெற்ற வியாபாரி சிறிய தொகையையே பறஇறாக வைத்திருப்பது பயனற்றது. அதைப் பெரிய தொகையாக்கலாம். தெவையில் இருப்பவராக நம்மிடம் அடுத்தாற்போல் வருபவருக்கு உடனே உதவி செய்வோமாக !
கைம்மாறைப்பற்றி நாம் நினைக்கக்கூடாது. ஆயினும் அதைக் குறித்து கடவுளிடம் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவா நாமம் மகிமைப்படுவதாக. அவர் வாக்குறுதியே பொன்னையும் வெள்ளியையும்விடச் சிறந்ததாகும். பொதுவான பணக்குறைவினால் நம்மிடமும் பொருள் குறைவாயிருக்கிறதா? நம் விற்பனைச் சீட்டை தாழ்மையாக நம்பிக்கையென்னும் வஙஇகியில் ஒப்படைப்போமாக. இதை வாசிப்பவர் யாராவது ஏழைகளிடத்திலஇ கடுமையாக நடந்துகொண்டதுண்டா? அவருக்காகப் பரிதாபப்படுவோம். ஆண்டவர் அவரை மன்னிப்பாராக.