“The righteous lead blameless lives; blessed are their children after them.” Proverbs 20:7.
Anxiety about our family is natural, but we shall be wise if we turn it into care about our own character. If we walk before the Lord in integrity, we shall do more to bless our descendants than if we bequeathed them large estates. A father’s holy life is a rich legacy for his sons.
The upright man leaves his heirs his example, and this in itself will be a mine of true wealth, How many men may trace their success in life to the example of their parents!
He leaves them also his repute. Men think better of us as the sons of a man who could be trusted, the successors of a tradesman of excellent repute, Oh, that all young men were anxious to keep up the family name!
Above all, he leaves his children his prayers and the blessing of a prayer-hearing God, and these make our offspring to be favored among the sons of men. God will save them even after we are dead. Oh, that they might be saved at once!
Our integrity may be God’s means of saving our sons and daughters. If they see the truth of our religion proved by our lives, it may be that they will believe in Jesus for themselves. Lord, fulfill this word to my household!
பிள்ளைகளுக்கு எதை விட்டுப்போவது ?
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான். அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். நீதி.20:7.
நம் குடும்பத்தினரைக் குறித்து நாம் கவலைப்படுவது இயற்கையே. ஆனால் அதை நாம் நடத்தையைச் சரிப்படுத்துவதைக் குறித்த கவலையாக்கினால் நாம் ஞானம் உள்ளவர்கள் ஆவோம். ஆண்டவர் முன் நாம் உத்தமர்களாய் நடந்தால் நம் பிள்ளைகளுக்கு ஏராளமான சொத்துக்களை விட்டுப் போவதைவிட அவர்களை அதிகமாய் ஆசீர்வதிக்கிறவர்களாய் இருப்போம். ஒரு தகப்பனின் தூய
வாழ்க்கையே அவன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் பெருஞ்சொத்தாகும்.
நேர்மையான மனிதன் தன் முன்மாதிரியைத் தன் பின் சந்ததியாருக்கு விட்டுச் செல்கிறான். அது உண்மையான செல்வச்சுரங்கமாகும். எத்தனை எத்தனையோ பேர் வாழ்க்கையில் தங்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் பெற்றோரின் முன்மாதிரியேயாகும் என்று சொல்லக் கூடும்.
அப்படிப்பட்ட தகப்பன் தன் நன்மதிப்பையும் விட்டுச் செல்கிறார். நம்பக்கூடிய ஒருவரின் பிள்ளைகள் என்றாலும் நற்பெயர் பெற்றிருந்த ஒரு வியாபாரியின் சந்ததியார் என்றாலும் மக்கள் நம்மை மதிப்பார்கள். தங்கள் குடும்பத்தின் நற்பெயரைப் பேணிக்காக்க வாலிபர் கவனமாயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன் பிள்ளைகளுக்காகத் தாம் செய்த வேண்டுதல்களையும் ஜெபங்களைக் கேட்கும் ஆண்டவரின் ஆசீர்வாதங்களையும் விட்டுச் செல்கிறார். இவற்றினால் நம் பிள்ளைகள் சலுகைகள் பெறுகிறவர்கள் ஆகிறார்கள். நாம் மரித்த பின்பும் கடவுள் அவர்களை இரட்சிப்பார். அவர்கள் இப்போதே இரட்சிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
நம் நேர்மையே நம் பிள்ளைகளைக் கடவுள் இரட்சிப்பதற்கான வழியாய் இருக்கலாம். நம் நம்பிக்கை உண்மையானதென்பது நம் வாழ்க்கையினால் மெய்ப்பிக்கப்பட்டால் அவர்களும் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களாய் இருப்பார்கள். ஆண்டவரே இந்த விருப்பம் என் குடும்பத்தாரில் நிறைவேறக் கிருபை செய்யும்.
Charles H. Spurgeon