“Do not consider it a hardship to set your servant free, because their service to you these six years has been worth twice as much as that of a hired hand. And the Lord your God will bless you in everything you do.” Deuteronomy 15:18.

An Israelitish master was to give his bondservant liberty in due time, and when he left his service he was to start him in life with a liberal portion, This was to be done heartily and cheerfully, and then the Lord promised to bless the generous act. The spirit of this precept, and, indeed, the whole law of Christ, binds us to treat people well. We ought to remember how the Lord has dealt with us, and that this renders it absolutely needful that we should deal graciously with others, It becomes those to be generous who are the children of a gracious God. How can we expect our great Master to bless us in our business if we oppress those who serve us?

What a benediction is here set before the liberal mind! To be blessed in all that we do is to be blessed indeed. The Lord will send us this partly in prosperity, partly in content of mind, and partly in a sense of His favor, which is the best of all blessings. He can make us feel that we are under His special care and are surrounded by His peculiar love. This makes this earthly life a joyous prelude to the life to come. God’s blessing is more than a fortune. It maketh rich and addeth no sorrow therewith.

கருணையுடன் நடத்துதல்

இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார் (உபா.15:18).

இஸ்ரவேலரில் எஜமான் ஆனவர் குறித்த காலத்தில் தன்னிடம் அடிமையாகச் சேவித்தவனுக்கு விடுதலை அளிக்கவேண்டும். வேலையை விட்டுப் போகும்போது அவன் ஏதாவது தொழில் செய்ய அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்ப வேண்டும். இதை மகிழ்ச்சியோடும் மனக்கசப்பில்லாமலும் செய்தால் அந்த எஜமானனின் தாராள மனப்பான்மையை ஆண்டவர் ஆசீர்வதிப்பதாகச் சொன்னார். இந்த போதனையின் கருத்தும் கிறிஸ்துவின் விதிமுறைகளும் நம்மிடம் வேலை செய்பவர்களைச் சரியான விதமாக நடத்த வேண்டும் என்பதையே உறுதிசெய்கின்றன. ஆண்டவர் நம்மை எவ்விதம் நடத்துகிறார் என்பதை நினைவிற்கொண்டு நாமும் மற்றவர்களைத் தகுந்தவிதமாக நடத்தவேண்டும். கிருபை நிறைந்த கடவுளின் பிள்ளைகளானவர்கள் தாராள மனப்பான்மை உள்ளவர்களாய் இருப்பது அவசியம். நமக்கு ஊழியம் செய்பவர்களை நாம் கொடுமைப்படுத்தினால் நம் தொழிலில் நம் எஜமானர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்கலாம் ?

தாராளமான மனப்பான்மை உள்ளவர்களுக்கு எவ்விதமான ஆசிவழங்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். செய்யும் எல்லாவற்றிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போமேயானால் அது மிகச் சிறந்த ஆசீர்வாதமேயாகும். இந்த
ஆசீர்வாதத்தை வாழ்வின் வளத்திலும் மனத்திருப்தியிலும் ஆண்டவர் காட்டும் சலுகையின் மூலமும் பெறுவோம். நாம் அவர் சிறப்பான பாதுகாப்பில் இருக்கிறோம் என்றும் அவர் அன்பு எம்மைச் சூழ்ந்திருக்கிறது என்றும் உணரச் செய்யும் சிறந்த ஆசீர்வாதம் அவர் காட்டும் சலுகையே ஆகும். இதனால் இவ்வுலக வாழ்க்கை இனிவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை முன் குறித்து காட்டுவதாகக் கொள்ளலாம். கடவுளின் ஆசீர்வாதம் சொத்து செல்வத்தை எல்லாம் விடச்சிறந்தது. ஏனெனில் அது ஐசுவரியந்தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

Charles H. Spurgeon