“The Lord God is my strength, and he will make my feet like hind’s feet, and he will make me to walk upon mine high places.” Habakkuk 3:19.
This confidence of the man of God is tantamount to a promise, for that which faith is persuaded of is the purpose of God. The prophet had to traverse the deep places of poverty and famine, but he went down hill without slipping, for the Lord gave him standing. By and by he was called to the high places of the hills of conflict; and he was no more afraid to go up than to go down.
See! The Lord lent him strength. Nay, Jehovah Himself was his strength. Think of that: the almighty God Himself becomes our strength!
Note that the Lord also gave him surefootedness. The hinds leap over rock and crag, never missing their footholds. Our Lord will give us grace to follow the most difficult paths of duty without a stumble. He can fit our foot for the crags so that we shall be at home where apart from God we should perish.
One of these days we shall be called to higher places still. Up yonder we shall climb, even to the mount of God, the high places where the shining ones are gathered. Oh, what feet are the feet of faith, by which, following the hind of the morning, we shall ascend into the hill of the Lord!
தடுமாறாமை
ஆண்டராகிய கர்த்தர் என் பெலன். அவர் கால்களை மான் கால்களைப் போலாக்கி உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். ஆப.3:19.
கடவுளின் மனிதனுடைய நம்பிக்கை ஒரு வாக்குறுதிக்கு ஒப்பானதாகும். ஏனெனில் அவன் நம்புவதே கடவுளின் திட்டமாகும். தீர்க்கர் வறுமை பஞ்சம் என்னும் ஆழமான பாதை வழியே செல்லவேண்டியிருந்தது. ஆனால் அவர் தவறி விழாமல் சென்றார். ஏனெனில் ஆண்டவர் அவரை நிலை பெற்றிருக்கச் செய்தார். ஒரு காலத்தில் அவர் மற்றவர்களுக்கு எதிர்த்து நிற்பது என்னும் மலை மேல் ஏறிப்போக அழைக்கப்பட்டார். ஆனால் ஆழங்களில் எவ்விதம் பயம் இல்லாமல் சென்றாரோ அவ்விதம் மலை மேலும் ஏறிப்போனார்.
கடவுள் அவருக்குப் பெலன் அளித்தார். யேகோவாவே அவர் பெலன் ஆனார். அதை நினைத்துப் பாருங்கள். சர்வ வல்லமையுள்ள கடவுளே நம் பெலன் ஆவார்.
ஆண்டவர் அவர் தடுமாறாமல் நடக்கவும் செய்தார். மான் மேடுகளிலும் பாறைகளிலும் தடுமாறாமல் குதித்துச் செல்கிறது. நாம் கடமையை நிறைவேற்ற கடினமான பாதைவழியே செல்ல வேண்டியிருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செல்லக் கிருபை அளிப்பார். பாறைகளுக்கேற்றவாறு நம் பாதங்களை அவர் அமைக்கக் கூடியவர். ஆகையால் இடரற்ற நிலையில் நாம் அங்கு இருப்போம். அவரை விட்டுப் பிரிந்து நின்றால் நாம் அழிந்து விடுவோம்.
வரும் நாட்களில் நாம் உயரமான ஸ்தலங்களுக்கு அழைக்கப்படுவோம். பிரகாசமானவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் கடவுளின் மலைக்குக்கூட நாம் ஏறிப்போவோம். ஆ நம்பிக்கையின் பாதங்கள் எப்படிப்பட்டவை. அவற்றினால் காலையில் குதித்து வரும் மான்களின் பின்னே நாமும் ஆண்டவரின் மலை மேல் ஏறிப்போவோம்.
Charles H. Spurgeon