‘But among the Israelites not a dog will bark at any person or animal.’ Then you will know that the Lord makes a distinction between Egypt and Israel. Exodus 11:7.
What! Has God power over the tongues of dogs! Can he keep ours from barking? Yes, it is even so. He can prevent an Egyptian dog from worrying one of the lambs of Israel’s flock. Doth God silence dogs, and doggish ones among men, and the great dog at hell’s gate? Then let us move on our way without fear.
If He lets dogs move their tongues, yet He can stop their teeth. They may make a dreadful noise and still do us no real harm. Yet, how sweet is quiet! How delightful to move about among enemies and perceive that God maketh them to be at peace with us! Like Daniel in the den of lions we are unhurt amid destroyers.
Oh, that today this word of the Lord to Israel might be true to me! Does the dog worry me? I will tell my Lord about him. Lord, he does not care for my pleadings; do Thou speak the word of power, and he must lie down. Give me peace, O my God, and let me see Thy hand so distinctly in it that I may most clearly perceive the difference which Thy grace has made between me and the ungodly!
வேறுபாடு இருக்கிறதா ?
கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை. யாத்.11:7.
என்ன? நாயின் நாவைக்கூட அடக்கும் திறன் கடவுளுக்கு இருக்கிறதா? அவற்றைக் குலைக்காமல் இருக்கச் செய்ய அவரால் முடியுமா? முடியும் எகிப்தினரின் நாய் இஸ்ரவேலரின் மந்தையிலுள்ள ஆட்டுக் குட்டிக்குத் தீங்கு செய்வதைக் கூடத்தடுக்க முடியும். கடவுள் நாய்களையும் மனிதரில் நாய் போன்றவர்களையும் நரகத்தின் வாசலிலுள்ள பெரிய நாயையும் வாயடங்கச் செய்யக் கூடியவரா? அப்படியானால் நாம் அச்சமின்றி நம் வழியே செல்லலாம்.
நாய்களை நாவை அசைக்கா விட்டாலும் அவை கடிப்பதை நிறுத்தக் கூடியவர். அவை மிகுந்த சத்தம் போட்டாலும் தீமை செய்யாமலிருக்கக் கூடும். ஆயினும் அமைதி எவ்வளவு இனிமையாயிருக்கிறது. பகைவர் மத்தியில் நடந்து திரியும்போது அவர்கள் நம்முடன் சமாதானமாயிருக்க ஆண்டவர் செய்துள்ளார் என்று அறிவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. தானியேல் சிங்கக் கெபியில் இருந்தது போல் அழிக்க வல்லவர்கள் மத்தியில் நாம் தீங்கடையாமல் இருக்கிறோம்.
இஸ்ரவேலருக்கு ஆண்டவர் அன்று சொன்னது இன்று எனக்குப் பொருந்துமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். நாய் எனக்குத் தொந்தரவு கொடுக்கிறதா ? அவனைப் பற்றி என் ஆண்டவரிடம் சொல்லுவேன். ஆண்டவரே நான் கெஞ்சுவதை அவன் கவனிக்க மாட்டேன் என்கிறான். நீர் ஆற்றல் வாய்ந்த சொற்களைப் பேசும். அவன் அடங்கிப்படுத்துக் கொள்வான். என் கடவுளே எனக்குச் சமாதானத்தைக் கொடும். எனக்கும் கடவுள் பயம் அற்றவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நான் தெளிவாய்க் காணுமாறு உம் கரத்தின் கிரியையை எளிதில் பார்க்கச் செய்யும்.
Charles H. Spurgeon