“Take delight in the Lord, and he will give you the desires of your heart.” Psalm 37:4.
Delight in God has a transforming power and lifts a man above the gross desire of our fallen nature. Delight in Jehovah is not only sweet in itself, but it sweetens the whole soul, till the longings of the heart become such that the Lord can safely promise to fulfill them. Is not that a grand delight which molds our desires till they are like the desires of God?
Our foolish way is to desire and then set to work to compass what we desire. We do not go to work in God’s way, which is to seek Him first and then expect all things to be added unto us. If we will let our heart be filled with God till it runs over with delight, then the Lord Himself will take care that we shall not want any good thing. Instead of going abroad for joys let us stay at home with God and drink waters out of our own fountain. He can do for us far more than all our friends. It is better to be content with God alone than to go about fretting and pining for the paltry trifles of time and sense. For a while we may have disappointments; but if these bring us nearer to the Lord, they are things to be prized exceedingly, for they will in the end secure to us the fulfillment of all our right desires. மனமகிழ்ச்சியும் இருதயத்தின் வேண்டுதல்களும்
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். சங்.37:4.
ஆண்டவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருத்தலுக்கு பெரு மாறுதல்களைச் செய்யக்கூடிய ஆற்றல் உண்டு. அது ஒருவனை அவன் வீழ்ச்சியடைந்த நிலையின் கீழ்த்தரமான ஆசைகளிலிருந்து உயர்த்தக் கூடியது. யேகோவாவில் மனமகிழ்ச்சியாய் இருத்தல் மகிழ்ச்சியூட்டக் கூடியது மட்டுமல்லாமல் இதயத்தின் ஆசைகளை ஆண்டவர் நம்பி நிறைவேற்றத்தக்கதாக ஆன்மா முழுவதையும் மனதிற்கு ஏற்றதாக்குகிறது. நம் இருதயத்தின் வேண்டுதல்களை கடவுளின் விருப்பங்களைப்போல் உருவாக்கக்கூடிய இது மன மகிழ்ச்சியானது அல்லவா?
நம் முட்டாள்தனத்தில் நாம் முதலாவது ஆசைப்பட்டு பின் நாம் விரும்புகிறதை அடைவதற்கு உழைக்கிறோம். கடவுளின் முறைப்படி நாம் உழைப்பதில்லை. அம்முறையில் முதலாவது அவரைத்தேட வேண்டும். பின் மற்றவையெல்லாம் கூடக்கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்க வேண்டும். நம் இருதயம் மனமகிழ்ச்சியால் நிரம்பி வழியும்வரை அதைக்கடவுள் நிரப்பாவிட்டால் நமக்கு எந்த நல்ல ஈவும் கிடைக்காமற் போகாதபடி ஆண்டவர் கவனமாயிருப்பார். மகிழ்ச்சியைத் தேடி வெளியிடங்களிற்குப் போகாமல் கடவுளோடு வீட்டிலேயே இருந்து நம் ஊற்றிலிருந்து தண்ணீரைக் குடிப்போமாக! நம் நண்பர்கள் எல்லோரும் நமக்குச் செய்வதைவிட ஆண்டவர் அதிகமாய்ச் செய்யக்கூடியவர். காலத்திற்கும் புலனுக்கும் பொருத்தமான அற்பமானவற்றிற்காக நாம் ஏங்கி எரிச்சல்படாமல் கடவுளிலேயே திருப்தி உள்ளவர்களாய் இருத்தல் நல்லது. சிறிது காலம் நமக்கு ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் நாம் ஆண்டவரை நெருங்கிச் சேர இவை உதவுமேயானால் இவற்றை நாம் உயர்வாக மதித்துப் பாராட்ட வேண்டும். ஏனெனில் இவற்றினால் இறுதியில் நம் நேர்மையான ஆசைகள் நிறைவேறும்.
Charles H. Spurgeon