“If you return to the Almighty, you will be restored: If you remove wickedness far from your tent” Job 22:23.
Eliphaz, in this utterance, spoke a great truth, which is the summary of many an inspired Scripture. Reader, has sin pulled you down? Have you become like a ruin? Has the hand of the Lord gone out against you so that in estate you are impoverished and in spirit you are broken down? Was it your own folly which brought upon you all this dilapidation? Then the first thing to be done is to return to the Lord. With deep repentance and sincere faith find your way back from your backsliding. It is your duty, for you have turned away from Him whom you professed to serve. It is your wisdom, for you cannot strive against Him and prosper. It is your immediate necessity, for what He has done is nothing compared to what He may do in the way of chastisement, since He is Almighty to punish.
See what a promise invites you! You shall be “built up.” None but the Almighty can set up the fallen pillars and restore the tottering walls of your condition; but He can and He will do it if you return to Him. Do not delay. Your crushed mind may quite fail you if you go on to rebel; but hearty confession will ease you, and humble faith will console you. Do this, and all will be well.
திரும்பக் கட்டப்படுவீர்கள்
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர். யோபு 22:23.
எலிப்பாஸ் பேசியபோது சிறப்பான உண்மையை வெளியிட்டார். அது வேதத்தில் பல இடங்களில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துக்களின் சுருக்கமுமாகும். இதை வாசிப்பவரே, பாவம் உம்மைப் படு குழிக்குள் இழுத்துச்சென்று விட்டதா? அழிவுற்றவரைப்போல் இருக்கிறீரா? கடவுளின் கரம் உமக்கு விரோதமாகி விட்டபடியால் வறுமை நிலையும் நைந்த உள்ளமும் உள்ளவராயிருக்கிறீரா? உமக்கு இவ்வுளவு சேதம் ஏற்பட்டதற்கு உம் மடமைதான் காரணமா? அப்படியானால் நீர் செய்யவேண்டிய முதல்வேலை ஆண்டவரிடம் திரும்புவதேயாகும். ஆழ்ந்த மனஸ்தாபத்தோடும் நேர்மையான விசுவாசத்தோடும் ஆண்டவரிடம் திரும்பி வாரும். அது உம்முடைய கடமையாகும். ஏனெனில் ஆண்டவரை சேவிப்பதாக உறுதிகூறிவிட்டு அவரை விட்டுச் சென்று விட்டீர். திரும்பி வருவதே நீர் செய்யத்தக்க விவேகமான செயலுமாகும். ஏனெனில் அவருக்கு விரோதமாக செயலாற்றி விட்டு வளமையடைய முடியாது. இது உடனடியாகச் செய்யவேண்டியதொன்றாகும். ஏனெனில் சர்வ வல்லமையுள்ள அவர் தண்டிக்கவும் கூடியவர். ஆகையால் திருந்துவதற்கு அவர் கொடுக்கும் தண்டனை இது வரை அளித்ததைவிடக் கடுமையானதாய் இருக்கலாம்.
திரும்பி வரச்சொல்லி உங்களை உங்களை அழைக்கும் வாக்குறுதியைப் பாருங்கள.; நீங்கள் கட்டப்படுவீர்கள் என்கிறார். சர்வ வல்லமையுள்ள அவர் ஒருவரே விழுந்து போனதூண்களை எடுத்து நிறுத்தவும், ஆட்டம் கண்டுள்ள சுவர்களைப் புதுப்பிக்கவும் கூடியவர். நீங்கள் அவரண்டை வந்தால் அவர் அவ்விதம் செய்வார். தாமதியாதேயுங்கள் நீங்கள் எதிர்த்து எழ முயன்றால் நொறுக்கப்பட்ட உங்கள் மனம் தளர்வுறலாம். ஆனால் உளங்கனிந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு அறிக்கை செய்தால் அமைதி கிடைக்கும். தாழ்மையுள்ள நம்பிக்கை ஆறுதலளிக்கும். மனந்திரும்பி விசுவாசித்தால் நலமுடன் இருக்கலாம்.
Charles H. Spurgeon