“So do not fear, for I am with you; do not be dismayed, for I am your God. I will strengthen you and help you; I will uphold you with my righteous right hand.” Isaiah 41:10.

Fear of falling is wholesome. To be venturesome is no sign of wisdom. Times come to us when we feel that we must go down unless we have a very special support. Here we have it. God’s right hand is a grand thing to lean upon. Mind, it is not only His hand, though it keepeth heaven and earth in their places, but His right hand: His power united with skill, His power where it is most dexterous. Nay, this is not all; it is written, “I will uphold thee with the right hand of my righteousness.” That hand which He uses to maintain His holiness and to execute His royal sentences?this shall be stretched out to hold up His trusting ones. Fearful is our danger, but joyful is our security. The man whom God upholds, devils cannot throw down.

Weak may be our feet, but almighty is God’s right hand. Rough may be the road, but Omnipotence is our upholding. We may boldly go forward. We shall not fall. Let us lean continually where all things lean. God will not withdraw His strength, for His righteousness is there as well. He will be faithful to His promise, and faithful to His Son, and therefore faithful to us. How happy we ought to be! Are we not so?

மகிழ்ச்சியான பாதுகாப்பு

என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசா.41:10.

இடறிக் கீழே விழுவதைக் குறித்து அச்சம் கொள்வது நற்பயன் விளைவிக்கிறதாகும். துணிவுடன் செயல்படுவது விவேகத்தின் அறிகுறியல்ல. சிறப்பான ஆதாரம் இல்லாவிட்டால் நாம் விழுந்து விடுவோம் என்று நினைக்கத் தூண்டும் சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்படலாம். இங்கு சிறப்பான ஆதாரம் நமக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. நம்மைத் தாங்குவதற்குக் கடவுளின் வலது கரமே காத்திருக்கிறது. அவருடைய கரங்கள் வானத்தையும் பூமியையும் அவற்றிற்கான இடத்தில் வைப்பதுபோன்ற முக்கிய வேலைகளைச் செய்தாலும் அவை நமக்கு வாக்குப்பண்ணப்படவில்லை. சிறப்பான அவரது வலது கரமே நம்மைத் தாங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது அவர் ஆற்றலையும் கைத் திறனையும் குறிக்கிறது. வலது கை ஆற்றலோடும் திறனோடும் செயல்படும். ஆண்டவர் என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று கூறுகிறார். கடவுளாகவும் அரசராகவும் செயல்பட உதவும் அந்தக் கை அவரை நம்புகிறவர்களைத் தாங்கவும் நீட்டப்படும். நம்மைத் தாக்கும் ஆபத்து அச்சம் தரக்கூடியது. ஆனால் நமக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. கடவுள் தாங்கிப் பிடிப்பவனைப் பிசாசு விழத் தள்ள முடியாது.

நம் பாதங்கள் வலுக்குறைந்தனவாய் இருக்கலாம். ஆனால் கடவுளின் வலது கரம் எல்லாம் செய்ய வல்லமையானது. நம் பாதை கரடுமுரடானதாய் இருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல கடவுள் நமக்கு ஆதரவளிப்பார். ஆகையால் நாம் தைரியமாக முன்னோக்கிச் செல்லலாம். நாம் விழுந்து விடமாட்டோம். எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் இருக்கும் கடவுள்மேல் நாம் எப்பொழுதும் சார்ந்திருப்போமாக. தம் ஆற்றல் நமக்குப் பயன்படாமல் இருக்க அவர் செய்யமாட்டார். ஏனெனில் அவர் நீதியுள்ளவர். அவர் இந்த வாக்குறுதியைக் குறித்து உறுதியுள்ளவர். அவர் குமாரனுக்கும் உறுதி உள்ளவர். ஆகையால் நமக்கும் உறுதியுள்ளவராய் இருப்பார். இதனால் நாம் மிகவும் மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவ்விதம் இருக்கிறோமா?

Charles H. Spurgeon