“Be diligent in these matters; give yourself wholly to them, so that everyone may see your progress.” 1 Timothy 4:15.
This is, practically, a promise that, by diligent meditation and the giving up of our whole mind to our work for the Lord we shall make a progress which all can see. Not by hasty reading but by deep meditation we profit by the Word of God. Not by doing a great deal of work in a slovenly manner, but by giving our best thought to what we attempt, we shall get real profit. “In all labor there is profit” but not in fuss and hurry without true heart-energy.
If we divide ourselves between God and mammon, or Christ and self, we shall make no progress. We must give ourselves wholly to holy things, or else we shall be poor traders in heavenly business, and at our stocktaking no profit will be shown.
Am I a minister? Let me be a minister wholly and not spend my energies upon secondary concerns. What have I to do with party politics or vain amusements? Am I a Christian? Let me make my service of Jesus my occupation, my lifework, my one pursuit. We must be in-and-in with Jesus, and then out-and-out for Jesus, or else we shall make neither progress nor profit, and neither the church nor the world will feel the forceful influence which the Lord would have us exercise.
மெய்யான இதயவலிமை
நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. 1.தீமோ.4:15.
இது ஊக்கந்தளராத தியானத்தாலும், ஆண்டவர் சேவைக்கென்று நம் முழு மனதையும் ஈடுபடுத்தி உழைப்பதாலும் நம்மில் ஏற்படும் முன்னேற்றம் யாவரும் காணத்தக்கதாயிருக்கும் என்பதைக் குறித்த வாக்குறுதியாகும். கடவுளுடைய வார்த்தையை அவசரம் அவசரமாய் வாசிப்பதினாலல்ல. ஆழ்ந்து தியானிப்பதினாலேயே முழு பயன் அடைவோம். சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டேயல்லாமல் மெய்யான இதய வலிமையின்றிக் காட்டப்படும் பரபரப்பிலும் படபடப்பிலும் அல்ல.
கடவுளுக்குப் பாதியும் உலகப் பொருளுக்குப் பாதியும் அல்லது கிறிஸ்துவுக்காகப் பாதியும் நமக்காகப் பாதியும் என்று ஊழியம் செய்ய நாம் முற்பட்டால் முன்னேறமாட்டோம். கடவுளுக்கென்றே முழுவதுமாக சேவை செய்ய நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இல்லையெனில், பரலோகத்துக்கான அலுவல்களில் நாம் குறைவுபட்டவர்களாய்க் காணப்படுவோம். சீர்தூக்கிப் பார்க்கும்போது நாம் எவ்விதம் முன்னேற்றத்தையும் காட்ட முடியாது.
நான் ஒரு போதகரா? நான் இரண்டாந்தரமான தொழில்களில் அக்கறை காட்டாமல் முழுவதுமாகப் போதகருக்கான பணிகளிலேயே ஈடுபடுவேன், கட்சி அரசியலும் வீணான வேடிக்கைகளிலும் நான் அக்கறை காட்டவேண்டியதில்லையே! நான் ஒரு கிறிஸ்தவனா? இயேசுவுக்கென்று உழைப்பதையே என் தொழிலாகவும் வாழ்நாள் பணியாகவும் ஒரே குறிக்கோளாகவும் கொள்வேன். நாம் முழுவதும் இயேசுவோடும், முற்றிலும் இயேசுவுக்காகவும் இருக்கவேண்டும். இல்லையெனில் நம்மில் முன்னேற்றமும் மேம்பாடும் காணப்படாது. நாம் கையாளவேண்டுமென்று ஆண்டவர் விரும்பும் ஆற்றல் வாய்ந்த சக்தியையும் சபையாவது உலகமாவது உணரவும் முடியாது.
Charles H. Spurgeon