“And the Lord shall be king over all the earth: in that day shall there be one Lord, and his name one.” Zechariah 14:9.
Blessed prospect! This is no dream of an enthusiast but the declaration of the infallible Word. Jehovah shall be known among all people, and His gracious sway shall be acknowledged by every tribe of man. Today, it is far from being so. Where do any bow before the great King? How much there is of rebellion! What lords many and gods many there are on the earth! Even among professed Christians what diversities of ideas there are about Him and His gospel! One day there shall be one King, one Jehovah, and one name for the living God. O Lord, hasten it! We daily cry, “Thy kingdom come.”
We will not discuss the question as to when this shall be lest we lose the comfort of the certainty that it shall be. So surely as the Holy Ghost spake by His prophets, so surely shall the whole earth be filled with the glory of the Lord. Jesus did not die in vain. The Spirit of God worketh not in vain. The Father’s eternal purposes shall not be frustrated, Here, where Satan triumphed, Jesus shall be crowned, and the Lord God Omnipotent shall reign. Let us go our way to our daily work and warfare made strong in faith.
ஒரே அரசர், ஒரே ஆண்டவர்
அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார். அந்நாட்களில் ஒரே கர்த்தர் இருப்பார். அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும் (சக.14:9).
இது பாக்கியமான எதிர்பார்த்தல். இது உணர்ச்சி ஆர்வம் மிக்க ஒருவரின் கனவல்ல. ஆனால் தவறமாட்டாத வேத வார்த்தையின் உறுதிமொழியாகும். ஒருநாள் மக்கள் யாவரும் யேகோவாவை அறிந்திருப்பார்கள். எல்லா நாட்டினரும் அவர் கிருபையுள்ள அரசியல் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வார்கள். இன்று அவ்வாறில்லை. யார் பெரிய அரசர்முன் பணிகிறார்கள்? உலகில் எத்தனை எத்தனை தலைவர்களும் தேவர்களும் இருக்கிறார்கள். கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் இடையேயும் அவரையும் அவர் நற்செய்தியையும் குறித்து எத்தனை எத்தனை மாறுபட்ட எண்ணங்கள் இருக்கின்றன. ஒருநாள் ஒரே அரசரும் ஒரே யேகோவாவும் இருப்பார். உயிருள்ள கடவுளுக்கு ஒரே பெயரும் இருக்கும். ஆண்டவரே, அந்த நாள் விரைவில் வரச் செய்யும். நாங்கள் ஒவ்வொரு நாளும் உம் ராஜ்யம் வருவதாக என்று வேண்டிக்கொள்கிறோம்!
அந்த நாள் எப்படியும் வரும் என்ற நிச்சயத்தை இழந்துவிடாதபடி அது எப்போது வரும் என்பதைக் குறித்து விவாதம் செய்யப்போவதில்லை. தீர்க்கர்கள் வழியாகப் பரிசுத்தஆவி பேசினது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக ஒருநாள் பூமி ஆண்டவரின் மகிமையால் நிறைந்திருக்கும். இயேசு வீணாக மரிக்கவில்லை. பரிசுத்த ஆவி வீணாக கிரியை செய்யவில்லை. பிதாவின் நித்திய நோக்கங்கள் நிறைவேறாமல் தடுக்கப்படக்கூடாது. சாத்தான் வெற்றிபெற்ற இங்கேயே இயேசு அரசராக அணிமுடி சூட்டப்படுவீர். எல்லாம் வல்ல கடவுள் அரசாளுவார். ஆகவே உறுதியான நம்பிக்கையில் நிலைநிறுத்தப்பட்டவர்களாய் நம் அன்றாடக வேலைக்கும் போருக்கும் செல்வோமாக !
Charles H. Spurgeon