“And I will make you to this people a fortified wall of bronze; they will fight against you, but they shall not prevail over you, for I am with you to save you and deliver you, declares the Lord.” Jeremiah 15:20.
Stability in the fear and faith of God will make a man like a wall of brass, which no one can batter down or break. Only the Lord can make such; but we need such men in the church, and in the world, but specially in the pulpit.
Against uncompromising men of truth this age of shams will fight tooth and nail. Nothing seems to offend Satan and his seed like decision. They attack holy firmness even as the Assyrians besieged fenced cities. The joy is that they cannot prevail against those whom God has made strong in His strength. Carried about with every wind of doctrine, others only need to be blown upon and away they go; but those who love the doctrines of grace, because they possess the grace of the doctrines, stand like rocks in the midst of raging seas.
Whence this stability? “I am with thee, saith the Lord”: that is the true answer. Jehovah will save and deliver faithful souls from all the assaults of the adversary. Hosts are against us, but the Lord of hosts is with us. We dare not budge an inch; for the Lord Himself holds us in our place, and there we will abide forever.
கடவுள் பற்றில் திடநிலை
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெங்கல அலங்கமாக்குவேன் அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள். ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள். உன்னை இரட்சிப்பதற்காகவும் உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரே.50:21.
கடவுள் பயத்திலும் நம்பிக்கையிலும் திடநிலை ஒரு மனிதனை வெண்கல அரண்போல் ஆக்கும். அதை ஒருவரும் நொறுக்கவாவது உடைக்கவாவது முடியாது. ஆண்டவர் ஒருவரே அவ்விதம் ஆக்கக் கூடும். உலகிலும் சபையிலும் முக்கியமாகப் போதிக்கவும் இப்படிப்பட்டவர்கள் தேவை.
போலி வாழ்க்கை மிகுந்திருக்கும் இக்காலத்தில் உண்மையைக் குறித்த சமரசத்திற்கு இணங்கிப் போகாத மக்களை மற்றவர்கள் கடுமையாகத்தாக்குவார்கள். சாத்தானையும் அவன் வித்துக்கள் போன்றவர்களையும் மன உறுதியைப்போல் வேறெதுவும் வெறுப்பூட்டுவதாகத் தெரியவில்லை. அசீரியர்கள் மதிற்சுவர்களால் பாதுகாக்கப்பட்ட நகரங்களையும் முற்றுகையிட்டது போல் இவர்கள் பக்தியில் உறுதியானவர்களைத் தாக்குகிறார்கள். ஆனால் தம்முடைய பலத்தினால் கடவுள் பலப்படுத்தியவர்களுக்கு எதிராக அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமயக்கோட்பாடுகளாகிய காற்றினால் அலைக்களிக்கப்படுகிறவர்கள் தாக்கப்பட்டவுடன் விழுந்து விடுகிறார்கள். ஆனால் கோட்பாடுகளின் கிருபையை உள்ளவர்கள் அக்கோட்பாடுகளின் கிருபையை நேசிப்பதால் கொந்தளிக்கும் கடவுளின் மத்தியில் இருக்கும் பாறைகளைப்போல் ஊறுதியாய் நிற்பார்கள்.
இவ்வித திட நிலையை எங்கிருந்து பெறுகிறார்கள்? நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுதான் உண்மையான காரணம் தம்மேல் திடப்பற்று உள்ளவர்களை யேகோவா எதிரிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றி விடுவிப்பார். தமக்கு எதிராகச் சேனைகள் வருகின்றன. ஆனால் சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நாம் இங்கிருந்து ஓர் அங்குலம் கூட நகரத்துணியோம். ஏனெனில் ஆண்டவரே அந்த இடத்தில் நம்மை வைத்துப் பிடித்திருக்கிறார். நாம் அங்கேயே நித்தியமாய் நிலைத்திருப்போம்.
Charles H. Spurgeon