“And now I will break his yoke from off you and will burst your bonds apart.” Nahum 1:13.

The Assyrian was allowed for a season to oppress the Lord’s people, but there came a time for his power to be broken. So, many a heart is held in bondage by Satan and frets sorely under the yoke. Oh, that to such prisoners of hope the word of the Lord may come at once, according to the text, “Now will I break his yoke from off thee, and will burst thy bonds in sunder!”

See! The Lord promises a present deliverance. “Now will I break his yoke from off thee.” Believe for immediate freedom, and according to thy faith so shall it be unto thee at this very hour. When God saith “now,” let no man say “tomorrow.”

See how complete the rescue is to be; for the yoke is not to be removed but broken; and the bonds are not to be untied but burst asunder. Here is a display of divine force which guarantees that the oppressor shall not return. His yoke is broken, we cannot again be bowed down by its weight. His bonds, are burst asunder, they can no longer hold us. Oh, to believe in Jesus for complete and everlasting emancipation! “If the Son shall make you free, ye shall be free indeed.” Come, Lord, and set free Thy captives, according to Thy Word.

உடனே விடுதலை

இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுக்களை அறுப்பேன. நாகூம் 1:13.

அசீரியர் ஆண்டவரின் மக்களைச் சிறிது காலம் ஒடுக்கி வைத்திருப்பதை ஆண்டவர் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆற்றலை முறிக்கும் காலம் வந்தது. பல ஆன்மாக்கள் சாத்தானின் கட்டுப்பாட்டில் அகப்பட்டிருப்பதால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கைதிகள் இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன் என்னும் நம்பிக்கை அளிப்பவையான சொற்களை உடனே கேட்டால் எவ்வளவு
நன்றாயிருக்கும்.

இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறிப்பேன் என்று ஆண்டவர் சொல்வதால் உடனே விடுதலையளிப்பதாக வாக்குப்பண்ணுகிறார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். உடனே விடுதலை கிடைக்கும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கைப்படி இப்போதே நடக்கும். கடவுள் இப்போது என்று சொல்லும் போது நம்மில் யாரும் நாளை என்று சொல்லாதிருப்போமாக. மீட்பு குறைபாடற்றதாய் இருக்கும் என்பதைக் கவனியுங்கள். நுகம் அகற்றப்படும் என்று சொல்லப்படவில்லை. முறிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. கட்டுகள் அவிழ்க்கப்படும் என்று சொல்லப்படவில்லை. அறுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தெய்வீக ஆற்றல் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. துன்பப்படுத்துகிறவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதற்கு உறுதியளிக்கிறது. நுகம் முறிக்கப்பட்டு விடுகிறது. ஆகையால் அதன் கனத்தால் நாம் மறுபடியும் குறுகிப்போகவேண்டியதில்லை. கட்டுக்கள் அறுக்கப்பட்டுப்போய்விடுகின்றன. ஆகையால் அவை நம்மை இனிக் கட்டிப்போடுவதில்லை. பூரணமான நித்திய விடுதலைக்காக ஆண்டவரை நம்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆண்டவரே கட்டப்பட்டிருக்கும் உம் பிள்ளைகளுக்கு உம் வார்த்தையின்படி விடுதலையளியும்.

Charles H. Spurgeon