“And they that be wise shall shine as the brightness of the firmament; and they that turn many to righteousness as the stars for ever and ever.” Daniel 12:3.
Here is something to wake me up. This is worth living for. To be wise is a noble thing in itself: in this place it refers to a divine wisdom which only the Lord Himself can bestow. Oh, to know myself, my God, my Savior! May I be so divinely taught that I may carry into practice heavenly truth and live in the light of it! Is my life a wise one? Am I seeking that which I ought to seek? Am I living as I shall wish I had lived when I come to die? Only such wisdom can secure for me eternal brightness as of yonder sunlit skies.
To be a winner of souls is a glorious attainment. I had need to be wise if I am to turn even one to righteousness; much more if I am to turn many, Oh, for the knowledge of God, of men, of the Word, and of Christ, which will enable me to convert my fellowmen and to convert large numbers of them! I would give myself to this, and never rest till I accomplish it. This will be better than winning stars at court. This will make me a star, a shining star, a star shining forever and ever; yea, more, it will make roe shine as many stars. My soul, arouse thyself. Lord, quicken me!
நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிப்பார்கள்
ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் (தானி.12:3).
இது என்னை விழிப்படையச் செய்யக்கூடிய வசனம். இவ்விதமான வாழ்க்கை ஆர்வத்துடன் விரும்பக்கூடிய ஒன்றாகும். ஞானவானாயிருப்பதே சிறப்பு வாய்ந்தது. அதோடு இங்கு குறிப்பிடப்படும் ஞானம் ஆண்டவர் ஒருவரே அளிக்கக்கூடிய தெய்வீக ஞானமாகும். என்னையும் என் தேவனையும் என் இரட்சகரையும் அறிந்து கொள்வது எவ்வளவு நலமானதாகும். பரலோக உண்மையை நான் செயலில் காட்டுபவனாகவும் அந்த ஒளியில் வாழ்பவனாகவும் இருக்கத் தக்கதாக கடவுள் எனக்குக் கற்பிப்பாராக! என் வாழ்க்கை ஞனம் நிறைந்ததாய் இருக்கிறதா? நான் தேடவேண்டியவைசகளைத் தேடுகிறேனா? மரணமடையப் போகும் நேரத்தில் என் வாழ்க்கையைக் குறித்துத் திருப்தி உள்ளவனாய் இருக்கத் தக்கதாக நான் வாழ்கிறேனா? அப்படிப்பட்ட வாழ்க்கையே ஆகாய மண்டலத்தின் ஒளியை எனக்குத் தேடித் தருவதாகும்.
ஆத்துமங்களை ஆண்டவருக்கென்று ஆதாயப்படுத்துவராயிருப்பது மகிமையான பேறாகும்.
ஒரு ஆத்துமாவை நீதியின் பாதையில் நடத்த வேண்டுமென்றாலும் நான் ஞானமுள்ளவனாய் இருக்க வேண்டும். பலரை அவ்விதம் நடத்த வேண்டுமென்றால் மிகுதியான ஞானம் தேவை. பலரை மனம் மாறச் செய்வதற்கான கடவுளையும் மக்களையும் வேதவசனங்களையும் பற்றிய அறிவு எனக்கிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இந்த வேலைக்கென்றே என்னை ஒப்புவிப்பேன். இதைச் செய்து முடிக்கும் வரை இளைப்பாறமாட்டேன். விளையாட்டுப் போட்டிகளில் பலவெற்றிகளையும் விருதுச் சின்னங்களையும் பெறுவதை விட இது சிறந்தது. இது என்னை ஒரு நட்சத்திரமாக மட்டுமல்ல, பிரகாசிக்கும் நட்சத்திரமாகவும் நித்தியமாகப் பிரகாசிக்கும் நட்சத்திரமாகவும் ஆக்கும். அது மட்டுமல்லாமல் பல நட்சத்திரங்களைப்போலப் பிரகாசிக்கச் செய்யும். என் ஆத்துமாவே விழித்தெழு! ஆண்டவரே என்னை உயிர்ப்பியும்!