” I myself will be the shepherd of my sheep, and I myself will make them lie down, declares the Lord God. I will seek the lost, and I will bring back the strayed, and I will bind up the injured, and I will strengthen the weak, and the fat and the strong I will destroy. I will feed them in justice.” Ezekiel 34:15.
Under the divine shepherdry saints are fed to the full. Theirs is not a windy, unsatisfying mess of mere human “thought,” but the Lord feeds them upon the solid, substantial truth of divine revelation. There is real nutriment for the soul in Scripture brought home to the heart by the Holy Spirit. Jesus Himself is the true life-sustaining Food of believers. Here our Great Shepherd promises that such sacred nourishment shall be given us by His own self. If, on the Lord’s Day, our earthly shepherd is empty-handed, the Lord is not.
When filled with holy truth the mind rests. Those whom Jehovah feeds are at peace. No dog shall worry them, no wolf shall devour them, no restless propensities shall disturb them. They shall lie down and digest the food which they have enjoyed. The doctrines of grace are not only sustaining but consoling: in them we have the means for building up and lying down. If preachers do not give us rest, let us look to the Lord for it.
This day may the Lord cause us to feed in the pastures of the Word and make us to lie down in them. May no folly and no worry but meditation and peace mark this day.
உணவும் இளைப்பாறுதலும்
என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்.34:15.
ஆண்டவர் மேய்ப்பராயிருந்தால் விசுவாசிகள் திருப்தியடையும் வரை மேய்ச்சலைக் கண்டடைகிறார்கள். அவர்கள் ஆன்மாவுக்கான உணவு திருப்தியளிக்க முடியாததான மக்களின் வெறும் எண்ணங்கள் மட்டுமல்ல, கடவுள் தாம் வெளிப்படுத்தும் உண்மையினால் அவர்களைத் திருப்தியாக்குகிறார். பரிசுத்த ஆவியானவர் வேதவசனங்களைத் தெளிவாக்குவாரேயானால், அது ஆன்மாவுக்குச் சத்துள்ள உணவாகும். விசுவாசிகளின் உயிருக்கு ஆதாரமான உணவு இயேசு கிறிஸ்துவே. இந்த வாக்குறுதியில் நம் சிறந்த மேய்ப்பரான அவர் தாமே நமக்குத் தேவையான உணவு அளிப்பதாக வாக்களிக்கிறார். ஆண்டவரின் நாளில் உலகப்பிரகாரமான நம் மேய்ப்பர்கள் வெறும்கையோடு இருந்தாலும் ஆண்டவர் அவ்விதம் இருப்பதில்லை.
தூய உணவினால் நிரப்பப்படும் போது நம் மனம் அமைதி அடைகிறது. யேகோவா யார்யாருக்கு உணவு அளிக்கிறாரோ அவர்கள் சமாதானத்துடன் இருக்கிறார்கள். எந்த நாயும் அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதில்லை. எந்த ஓநாயும் அவர்களை விழுங்கி விடுவதில்லை. அமைதியற்ற எந்த மன நிலையும் அவர்கள் மனஅமைதியைக் குலைப்பதில்லை. அவர்கள் உண்ட உணவு ஜீரணிக்க அமர்ந்திருப்பார்கள். கிருபையைக் குறித்துக் கொள்கைகள் ஒருவர் விழாமல் நிலைநிறுத்தக் கூடியவைகள் மட்டுமல்லாமல் தேற்றக்கூடியவையாயும் அமைகின்றன. அவை நம் வளர்ச்சிக்குப் பயன்படுபவை மட்டுமல்லாமல் நம்மை அமர்ந்திருக்கவும் செய்கின்றன. போதகர்களால் நமக்குத் தேவையான அமைதியைக் கொடுக்க முடியாமற்போனால் நாம் அத்தேவையை நிறைவேற்ற ஆண்டவரை நோக்கிப்பார்ப்போமாக!
இந்நாளிலே நாம் வேதவசனங்களை உண்டு அவற்றைப் பற்றி ஆராய அமர்ந்திருப்போமாக! இந்நாளிலே எந்த விதமான கவலையும் நம்மைத் தாக்காமலிருப்பதாக! நாம் எந்த முட்டாள்தனமான செய்கையும் செய்யாமல் சமாதானத்தோடு ஆண்டவரைப் பற்றித் தியானம் செய்வோமாக!
Charles H. Spurgeon.