“Their soul shall be as a watered garden.” Jeremiah 31:12.
Oh, to have one’s soul under heavenly cultivation; no longer a wilderness but a garden of the Lord! Enclosed from the waste, walled around by grace, planted by instruction, visited by love, weeded by heavenly discipline, and guarded by divine power, one’s favored soul is prepared to yield fruit unto the Lord.
But a garden may become parched for want of water, and then all its herbs decline and are ready to die. O my soul, how soon would this be the case were the Lord to leave thee! In the East, a garden without water soon ceases to be a garden at all: nothing can come to perfection, grow, or even live. When irrigation is kept up, the result is charming. Oh, to have one’s soul watered by the Holy Spirit uniformly?every part of the garden having its own stream; plentifully?a sufficient refreshment coming to every tree and herb, however thirsty by nature it may be; continually?each hour bringing not only its heat, but its refreshment; wisely?each plant receiving just what it needs. In a garden you can see by the verdure where the water flows, and you can soon perceive when the Spirit of God comes.
O Lord, water me this day and cause me to yield Thee a full reward for Jesus’ sake. Amen.
ஏராளமான உணவு
அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கிறது. எரேமி.31:32.
ஒருவரின் ஆன்மா பரலோகத்தின் தோட்டமாயிருப்பது எவ்வளவு சிறப்பானது என்று நினைத்துப் பாருங்கள். அது இனிமேல் வனாந்தரம் போல் இருப்பதில்லை. ஆண்டவரின் தோட்டமாயிருக்கும். பாழ்நிலத்திலிருந்து வேலியால் பிரிக்கப்பட்டு, கிருபையினால் சூழப்பட்டு, போதனையினால் நடப்பட்டு, அன்பினால் பராமரிக்கப்பட்டு, பரலோகத்தின் ஒழுங்குமுறையினால் களைகள் களையப்பட்டு, புனிதமான ஆற்றலினால் பாதுகாக்கப்பட்டு ஒருவரின் மிகப் பிடித்தமான ஆன்மா ஆண்டவருக்கென்று கனிகள் கொடுக்க ஆயத்தமாக்கப்படுகின்றது.
சிலவேளைகளில் நீர் இல்லாமல் தோட்டம் காய்ந்து செடிகள் வாடி மடிந்து விடும். என் ஆன்மாவே ஆண்டவர் உன்னை விட்டுச் சென்றுவிட்டால் எவ்வளவு சீக்கிரத்தில் இவ்விதம் நேர்ந்து விடும் என்று நினைத்துப்பார். கீழ் நாடுகளில் நீரில்லாத தோட்டம் வெகு சீக்கிரத்தில் பாழானதாகி விடுகின்றது. அங்கு ஒன்றும் முளைக்கவாவது உயிர் பெறவாவது செழித்துவளரவாவது முடியாது. நீர் பாய்ச்சப்பட்டுக் கொண்டேயிருந்தால் அதன் பயன் தோட்டத்தின் அழகில் காணப்படும். ஒருவரின் ஆன்மா பரிசுத்த ஆவியால் ஒரே விதமாக நீர்பாய்ச்சப்பட்டாலும், தோட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமான நீரைக் கொடுக்கக் கூடிய நீரூற்றுக்கள் இருந்தாலும், இயற்கையாக எவ்வளவு நீர் தேவை என்றாலும், ஒவ்வொரு மரத்துக்கும் செடிக்கும் தேவையான நீர் கிடைத்தாலும், தேவையான வெப்பம் மட்டுமன்றி உணவும் ஒவ்வொன்றிற்கும் தேவையான அளவு கிடைத்தாலும் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு தோட்டத்தில் நீர் நன்றாகப் பாயும் இடம் பசுமையாய் இருப்பதைக் காணலாம். அதேவிதமாக ஆவி வரும் இடத்தையும் சீக்கிரத்தில் கண்டுகொள்ளலாம்.
அண்டவரே, இன்று ஏனெனில் நீர்பாய்ச்சி, உமக்கென்று ஏராளமான கனிகள் கொடுக்கச் செய்யும். இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்ளுக்றேன் ஆமென்.
Charles H. Spurgeon.