“The Lord’s curse is on the house of the wicked, but he blesses the home of the righteous.” Proverbs 3:33.
He fears the Lord, and therefore he comes under the divine protection even as to the roof which covers himself and his family. His home is an abode of love, a school of holy training, and a place of heavenly light. In it there is a family attar where the name of the Lord is daily had in reverence. Therefore the Lord blesses his habitation. It may be a humble cottage or a lordly mansion; but the Lord’s blessing comes because of the character of the inhabitant and not because of the size of the dwelling.
That house is most blest in which the master and mistress are Godfearing people; but a son or daughter or even a servant may bring a blessing on a whole household. The Lord often preserves, prospers, and provides for a family for the sake of one or two in it, who are “just” persons in His esteem, because His grace has made them so. Beloved, let us have Jesus for our constant guest even as the sisters of Bethany had, and then we shall be blessed indeed.
Let us look to it that in all things we are just?in our trade, in our judgment of others, in our treatment of neighbors, and in our own personal character. A just God cannot bless unjust transactions.
வீட்டின்மேல் ஆசீர்வாதங்கள்
நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையே அவர் ஆசீர்வதிக்கிறார். நீதி.3:33.
நீதிமான் கர்த்தருக்குப் பயப்படுகிறான். ஆகையால் அவனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் வீட்டின் கூரை பாதுகாப்பு அளிப்பது போல் கடவுளும் பாதுகாப்பு அளிக்கிறார். அவன் வீடு அன்பின் இருப்பிடமாகவும், திருப்பணிக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளியாகவும், பரலோகத்தின் ஒளிவீசும் இடமாகவும் இருக்கின்றது. அங்கு ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் நாமம் பயபக்தியோடு போற்றப்படுகிறது. ஆகையால் ஆண்டவர் அந்த வாசஸ்தலத்தை ஆசீர்வதிக்கிறார். அது ஒரு சிறு குடிசையாக அல்லது பெரிய மாளிகையாக இருக்கலாம். ஆனாலும் அதன் அளவிற்காக அல்லாமல் அதில் வாசம் செய்பவர்களின் பண்புக்காக ஆண்டவர் அதை ஆசீர்வதிக்கிறார்.
எந்த வீட்டின் தலைவனும் தலைவியும் கடவுளுக்குப் பயந்தவர்களாய் இருக்கிறார்களோ அந்த வீடு அதிகமாய் ஆசீர்வதிக்கப்படும். ஒரு மகனோ, மகளோ, வேலைக்காரனோ கூட குடும்பத்தினர் மேல் ஆசீர்வாதம் கொண்டு வரலாம். எந்த ஒரு குடும்பத்தில் ஒருவரோ அல்லது இருவரோ ஆண்டவருடைய மதிப்பின்படி நீதிமான்களாய் இருக்கிறார்களோ அந்தக் குடும்பத்தைப் பொதுவாக ஆண்டவர் பாதுகாத்து, வளமையுறச் செய்து, அதற்குத் தேவையானவற்றை அளிக்கிறார். ஏனெனில் அவர் கிருபையினாலேயே அவர்கள் நீதிமான்களாய் இருக்கிறார்கள். அன்பானவர்களே, பெத்தானியாவில் இருந்த சகோதரிகளைப் போல் நாமும் இயேசுவை நிலையான விருந்தினராய் வைத்திருக்கலாம். அப்போது நாம் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்போம்.
நம் வேலையிலும், மற்றவர்களை நியாயந்தீர்ப்பதிலும், அண்டை அயலாரோடு பழகும் விதத்திலும், நம் சிறப்பியல்பிலும், எல்லாவற்றிலும் நாம் நீதிமான்களாய் இருப்பதைக் குறித்து கவனமாய் இருப்போமாக. நீதியுள்ள கடவுள் அநீதியான நடவடிக்கைகளை ஆசீர்வதிக்கமாட்டார்.
Charles H. Spurgeon