“The Lord gives sight to the blind, the Lord lifts up those who are bowed down, the Lord loves the righteous.” Psalm l46:8.
Am I bowed down? Then let me urge this word of grace before the Lord. It is His way, His custom, His promise, His delight, to raise up them that are bowed down. Is it a sense of sin and a consequent depression of spirit which distresses me? Then the work of Jesus is, in this case, made and provided to raise me up into rest. O Lord, raise me, for Thy mercy’s sake!
Is it a sad bereavement or a great fall in circumstances? Here again the Comforter has undertaken to console. What a mercy for us that one Person of the sacred Trinity should become the Comforter! This work will be well done since such a glorious One has made it His peculiar care.
Some are so bowed down that only Jesus can loose them from their infirmity, but He can, and He will, do it. He can raise us up to health, to hope, to happiness. He has often done so under former trials, and He is the same Savior and will repeat His deeds of lovingkindness. We who are today bowed down and sorrowful shalt yet be set on high, and those who now mock at us shall be greatly ashamed. What an honor to be raised up by the Lord! It is worthwhile to be bowed down that we may experience His upraising power.
தூக்கிவிடுவதற்கு வல்லமை
குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார். மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார். சங்.146:8.
நான் மடங்கடிக்கப்பட்டவனாய் இருக்கிறேனா? அப்படியானால் ஆண்டவரின் சமுகத்தில் கிருபையுள்ள அவர் சொற்களை வற்புறுத்திக் கூறுவேன். மடங்கடிக்கப்பட்டவர்களைத் தூக்கிவிடுவது அவர் வழி, பழக்கம், வாக்குறுதி, மகிழ்ச்சி ஆகும். பாவ உணர்ச்சியும் அதனால் ஏற்பட்ட மனச்சோர்வும் என்னை வேதனைப்படுத்துகிறதா? அப்படியானால் இச்சந்தர்ப்பத்தில் அவர் என்னை தூக்கிவிடவேண்டும். ஆண்டவரே, உம் கிருபையினால் என்னைத் தூக்கிவிடும்.
அல்லது மரணத்தினால் யாராவது இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேனா? அல்லது சூழ்நிலை மாற்றத்தினால் கவலையடைந்திருக்கிறேனா? இங்கேயும் தேற்றரவாளன் ஆறுதலளிக்க முன்வருகிறார். தூய திரியேகரில் ஒருவர் தேற்றரவாளனாயிருப்பது எவ்வளவு கிருபை நிறைந்த செயல் ஆகும். மகிமை நிறைந்தவர் இவ்வேலையைத் தமதாக்கிக் கொண்டிருப்பதால் அதைச் செய்தே தீருவார்.
சிலர் மடங்கடிக்கப்பட்டு, கீழேயே விழுந்து கிடப்பதால் அவர்கள் பெலவீனத்திலிருந்து இயேசு ஒருவரே அவர்களைப் பெலப்படுத்தி, தூக்கிவிட முடியும். அவராலே செய்ய முடியும். அவர் கண்டிப்பாகச் செய்வார். நம்மை நற்சுகத்துக்கும், நம்பிக்கைக்கும், மகிழ்ச்சிக்கும் உயர்த்த அவரால் முடியும். கடந்த காலத்தில் கடுந்துன்ப அனுபவங்கள் ஏற்பட்டபோது அவர் அவ்விதம் உதவியிருக்கிறார். அவர் மாறாத இரட்சகர். அன்பும் இரக்கமும் நிறைந்த செயல்களைச் செய்துகொண்டேயிருப்பார். இன்று மடங்கடிக்கப்பட்டவர்களாயும், துக்கம் நிறைந்தவர்களாயும் இருக்கும் நாமும் உயர்த்தப்படுவோம். இப்போது நம்மைப் பரியாசம் செய்பவர்கள் வெட்கப்பட்டுப் போவார்கள். ஆண்டவரால் உயர்த்தப்படுவது எவ்வளவு மகிமையானதாகும். நம்மை உயர்த்தக்கூடிய அவர் வல்லமையைக் காண்பதற்காக இப்போது மடங்கடிக்கப்பட்டவர்களாய் இருப்பதைக் குறித்து நாம் கவலைப்படக்கூடாது.
Charles H. Spurgeon