“Whoever has ears, let them hear what the Spirit says to the churches. To the one who is victorious, I will give some of the hidden manna. I will also give that person a white stone with a new name written on it, known only to the one who receives it.” Revelation 2:17.

My heart, be thou stirred up to persevere in the holy war, for the reward of victory is great. Today we eat of heavenly food which falls about our camps; the food of the wilderness, the food which comes from heaven, the food which never fails the pilgrims to Canaan. But there is reserved for us in Christ Jesus a still higher degree of spiritual life and a food for it which, as yet, is hidden from our experience. In the golden pot which was laid up in the ark there was a portion of manna hidden away, which though kept for ages never grew stale. No one ever saw it; it was hid with the Ark of the Covenant, in the Holy of Holies. Even so, the highest life of the believer is hid with Christ, in God. We shall come to it soon, Being made victorious through the grace of our Lord Jesus, we shall eat of the King’s meat and feed upon royal dainties. We shall feed upon Jesus. He is our “hidden manna,” as well as the manna of the wilderness. He is all in all to us in our highest, as well as in our lowest, estate. He helps us to fight, gives us the victory, and then is Himself our reward. Lord, help me to overcome.

மேற்கொள்பவரின் பரிசு

ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும் அந்தக் கல்லின் மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக் கூடாதுதுமாகிய புதிய நாமத்தைக் கொடுப்பேன். வெளி 2:17.

என் உள்ளமே, தூயப்போரை விடாமுயற்சியுடன் செய்ய ஊக்கம் உள்ளதாயிரு. ஏனெனில் வெற்றிக்கான பரிசு மிகவும் சிறப்புள்ளதாகும். இன்று நாம் பாசறையைச் சுற்றி விழும் வானுலகத்துக்குரிய உணவை உண்கிறோம். அது வனாந்தரத்தின் உணவு வானுலகத்திலிருந்து வரும் உணவு கானானுக்குச் செல்லும் யாத்திரிகளுக்கு எப்போதும் கிடைக்கும் உணவு. ஆனால் இயேசு கிறிஸ்துவில் நமக்கென்று இதைவிட மேலான ஆன்ம வாழ்வும் அதற்கான உணவும் காத்திருக்கின்றன. அது இப்போது நம் அனுபவத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொற்பாத்திரத்தில் சிறிது மன்னா பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அது பல்லாண்டுகாலமாக அவ்வாறு வைக்கப்பட்டிருந்தாலும் கெட்டுப் போகவில்லை. அதை ஒருவரும் ஒருநாளும் பார்த்ததில்லை. உடன்படிக்கைப் பெட்டியில் அது மகா பரிசுத்த ஸ்தலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதேபோல விசுவாசியின் உயர்வான வாழ்க்கை கடவுளில் கிறிஸ்துவோடு மறைத்து வைக்கப் பட்டுள்ளது. நாம் விரைவில் அதை அடைவோம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலமாய் வெற்றி பெற்றபின் அரசரின் விருந்தில் பங்கு
பெற்று அரச விருந்தை உண்போம். இயேசு கிறிஸ்துவை உண்போம். நமக்கு மறைக்கப்பட்டிருக்கும் மன்னாவும் வனாந்தரத்தின் மன்னாவும் அவரே. நம் உயர்வான நிலையிலும் கீழான நிலையிலும் எல்லாவற்றுக்கும் எல்லாமும் அவரே. போரிட அவர் நமக்கு உதவி செய்கிறார். வெற்றியை அளிக்கிறார். அவரே பரிசும் ஆகிறார். ஆண்டவரே மேற்கொள்ள எனக்கு உதவி செய்யும்.

Charles H. Spurgeon