“Rejoice not against me, O mine enemy: when I fall, I shall arise; when I sit in darkness, the Lord shall be a light unto me.” Micah 7:8.
This may express the feelings of a man or woman downtrodden and oppressed. Our enemy may put out our light for a season. There is sure hope for us in the Lord; and if we are trusting in Him and holding fast our integrity, our season of downcasting and darkness will soon be over. The insults of the foe are only for a moment. The Lord will soon turn their laughter into lamentation and our sighing into singing.
What if the great enemy of souls should for a while triumph over us, as he has triumphed over better men than we are; yet let us take heart, for we shall overcome him before long. We shall rise from our fall, for our God has not fallen, and He will lift us up. We shall not abide in darkness, although for the moment we sit in it; for our Lord is the fountain of light, and He will soon bring us a joyful day. Let us not despair or even doubt. One turn of the wheel, and the lowest will be at the top. Woe unto those who laugh now, for they shall mourn and weep when their boasting is turned into everlasting contempt. But blessed are all holy mourners, for they shall be divinely comforted.
தோல்வியில் வெற்றி
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். மீகா 7:8.
இது ஒடுக்கப்பட்டு, இழிவாக நடத்தப்படும் ஒருவரின் மனநிலையை வெளியிடலாம். சத்துரு சிறிது காலம் நம் வாழ்க்கையை இருண்டதாக ஆக்கலாம். ஆனால் ஆண்டவரில் நமக்கு நிச்சயமான நம்பிக்கை இருக்கிறது. நாம் அவரை நம்பி, நேர்மையாக நடந்தோமேயானால் இருண்டதும் வாட்டமுற்றதுமான நம் நாட்கள் சீக்கரத்தில் முடிந்துவிடும். எதிரி சிறிது காலமே நம்மை அவமதிப்பான். கர்த்தர் சீக்கிரத்தில் அவர்கள் மகிழ்ச்சியைப் புலம்பலாகவும் நம் பெருமூச்சுகளைப் பாடலாகவும் மாற்றிவிடுவார்.
ஆன்மாக்களின் எதிரி நம்மைவிட நல்லவர்கள்மேல் வெற்றி பெற்றதுபோல் நம் மேலும் வெற்றிபெற்று விட்டால் நாம் கலங்கவேண்டியதில்லை. சீக்கிரத்தில் அவனை மேற்கொள்வோம் என்று தைரியம் கொள்ளலாம். விழுந்த நாம் சீக்கிரத்தில் எழுந்துவிடுவோம். ஏனெனில் நம் கடவுள் விழுந்துவிடவில்லை. அவர் நம்மைத் தூக்கிவிடுவார். நாம் ஒரு நிமிடம் இருட்டில் இருந்தாலும் அதிலேயே நிலைத்திருக்கமாட்டோம். ஏனெனில் நம் ஆண்டவர் வெளிச்சத்தின் ஊற்றானவர். அவர் சீக்கிரத்தில் நம் நாட்களை மகிழ்ச்சியானவை ஆக்குவார். நாம் தளர்ச்சியடைவும் சந்தேகப்படவும் வேண்டியதில்லை. சக்கரம் ஒருமுறை சுழலும்போது கீழானோர் மேலானோர் ஆவார்கள். இப்போது சிரிப்பவர்களுக்கு ஐயோ! ஏனெனில் அவர்களின் வீம்பான தற்புகழ்ச்சி நித்திய இகழ்ச்சியாக மாற்றப்படும். அவர்கள் புலம்பி விழுவார்கள். அனால் தூயவர்களாயிருந்து இப்போதும் புலம்புகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளால் தேற்றப்படுவார்கள்.
Charles H. Spurgeon