“Blessed are the merciful for they shall obtain mercy.” Matthew 5:7.
It is not meet that the man who will not forgive should be forgiven, nor shall he who will not give to the poor have his own wants relieved. God will measure to us with our own bushels, and those who have been hard masters and hard creditors will find that the Lord will deal hardly with them. “He shall have judgment without mercy, that hath shewed no mercy.”
This day let us try to give and to forgive. Let us mind the two bears-bear and forbear. Let us be kind, gentle, and tender. Let us not put harsh constructions upon men’s conduct, nor drive hard bargains, nor pick foolish quarrels, nor be difficult to please. Surely we wish to be blessed, and we also want to obtain mercy: let us be merciful, that we may have mercy. Let us fulfill the condition, that we may earn the beatitude. Is it not a pleasant duty to be kind? Is there not much more sweetness in it than in being angry and ungenerous? Why, there is a blessedness in the thing itself! Moreover, the obtaining of mercy is a rich reward. What but sovereign grace could suggest such a promise as this’. We are merciful to our fellow mortal in pence, and the Lord forgives us “all the debt.”
பிறருக்குக் கொடு! பெற்றுக்கொள்
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்.5:7.
மன்னிக்காதவன் மன்னிப்பைப் பெறுவதும் ஏழைகளுக்குக் கொடுக்காதவன் தன் தேவைகளுக்கு ஏற்றவைகளைப் பெற்றுக்கொள்வதும் சரியல்ல. நாம் அளிக்கும் அளவின்படியே ஆண்டவரும் நமக்கு அளிப்பார். கொடிய எஜமான்களாகவும் கடன் கொடுக்காதவர்களாயும் இருப்பவர்கள் ஆண்டவரும் தங்களிடம் கடுமையாக நடந்துகொள்வதைக் காண்பார்கள். இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்.
இந்த நாளில் மன்னிக்கவும் ஏழைகளுக்குக் கொடுக்கவும் பிரயாசப்படுவோமாக. மற்றவர்களைத் தாங்குகிறவர்களாகவும், பொறுத்துக்கொள்கிறவர்களாகவும் இருப்போமாக. இரக்கம் உள்ளவர்களாகவும், கனிவு நிறைந்தவர்களாகவும், இளகிய மனம் உள்ளவர்களாகவும் இருப்போமாக. மக்களின் நடத்தைக்கேற்ப கடுமையாச் செயலாற்றுகிறவர்களாகவும், சலுகையற்ற முறையில் கடுமையாகச் செயலாற்றுகிறவர்களாகவும், சிறுபிள்ளைத்தனமாக சச்சரவுகளைத் தொடங்குகிறவர்களாகவும் எளிதில் திருப்திகொள்ளாதவர்களாகவும், இருப்பது நல்லதல்ல. நமக்கு பாக்கியவான்களாய் இருக்கவேண்டும் என்றும், இரக்கம் பெறவேண்டும் என்றும் விருப்பம் உண்டு. நாம் இரக்கம் பெறுவதற்கு ஏற்றவாறு இரக்கம் உள்ளவர்களாய் இருப்போமாக. நாம் பாக்கியவான்களாய் இருப்பதற்குச் செய்யவேண்டியவைகளைச் செய்வோமாக. இரக்கம் காட்டுவது மகிழ்வளிக்கிற செய்கை அல்லவா? சினம்கொண்டவர்களாகவும், பெருந்தன்மை அற்றவர்களாகவும் இருப்பதைவிட இரக்கம் உள்ளவர்களாய் இருப்பது வாழ்வுக்கு இனிமை அளிக்கிறது அல்லவா? அதே பாக்கியமானதாகும். அதுவுமல்லாமல் இரக்கம் பெறுவது சிறந்த பரிசாகும். கடவுளுடைய கிருபையேயல்லாமல் வேறு எது அவ்வித பரிசை எடுத்துக்கூறக்கூடும்? நாம் மற்றவர்களின் கடுகளவுக் குற்றத்தையே மன்னித்தால் ஆண்டவரும் அந்த அளவான நம் குற்றங்களையே மன்னிக்கிறார்.
Charles H. Spurgeon.