“In vain you rise early and stay up late, toiling for food to eat— for he grants sleep to those he loves.” Psalm 127:2.
Ours is not a life of anxious care but of happy faith. Our heavenly Father will supply the wants of His own children, and He knoweth what we have need of before we ask Him. We may therefore go to our beds at the proper hour and not wear ourselves out by sitting up late to plot, and plan, and contrive. If we have learned to rely upon our God, we shall not lie awake with fear gnawing at our hearts; but we shall leave our care with the Lord, our meditation of Him shall be sweet, and He will give us refreshing sleep.
To be the Lord’s beloved is the highest possible honor, and he who has it may feel that ambition itself could desire no more, and therefore every selfish wish may go to sleep. What more is there even in heaven than the love of God? Rest, then, O soul, for thou hast all things. Yet we toss to and fro unless the Lord Himself gives us not only the reasons for rest but rest itself. Yea, He doth this. Jesus Himself is our peace, our rest, our all, On His bosom we sleep in perfect security, both in life and in death.
Sprinkled afresh with pardoning blood,
I lay me down to rest
As in the embraces of my God,
Or on my Saviour’s breast.
புது வலுவுண்டாக்கும் நித்திரை
அவரே தனக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்.127:3.
நம் வாழ்க்கை கவலை மிகுந்த ஒன்றல்ல ஆனால் மகிழ்ச்சியான நம்பிக்கை மிகுந்த ஒன்றாகும். நம் பரமபிதா அவர் பிள்ளைகளின் தேவைகளையெல்லாம் நிறைவாக்குவார். நாம் வேண்டிக் கொள்வதற்கு முன்னதாகவே நமக்கு என்ன தேவை என்று அவருக்குத் தெரியும். ஆகையால் நாம் சோர்வு அடையத் தக்கதாக கண்விழித்திருந்து திட்டமிடவும் முன்னேற்பாடு செய்யவும் அவற்றை முனைந்து செயல்படுத்தவும் தேவையில்லை. நாம் உரிய நேரத்தில் படுத்து நித்திரை செய்யலாம். நம்பிக்கையோடு கடவுள் மேல் சார்ந்திருக்க நாம் அறிந்திருந்தால் நம் உள்ளத்தில் பயம் அரித்துக் கொண்டிருப்பதால் நித்திரை வராமல் தவிக்க மாட்டோம். நம் கவலைகளையெல்லாம் அவரிடம் வைத்து விடுவோம். அவரைக்குறித்து தியானிப்பது நமக்கு இனிமையாய் இருக்கும். அவர் நமக்கு புதுவலு உண்டாக்கும் நித்திரை அளிப்பார்.
ஆண்டவருக்குப் பிரியமானவராயிருப்பதே நமக்குக் கிடைக்கக் கூடிய பெரும் புகழாகும். இதை உடையவர் வேறெதையும் அடைய ஆர்வம் அற்றிருப்பர். ஆகையால் தன்னயமான எந்த விருப்பமும் அவரில் தலைதூக்காது. பரலோகத்தில்கூட தேவனின் அன்பைவிட ஆழமானது ஒன்றுமில்லை. ஆகையால் என் உள்ளமே உனக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது. நீ அமர்ந்திரு.
நாம் இளைப்பாறுவதற்கு ஏற்ற நிலையையும் இளைப்பாறுதலையும் ஆண்டவர் நமக்கு அளிக்கும் வரை நாம் படுக்கையில் புரண்டு கொண்டே இருப்போம். அவரே நித்திரை அளிப்பவர். இயேசுவே நம் சமாதானமும் இளைப்பாறுதலும் எல்லாமும் ஆனவர். வாழ்விலும் மரணத்திலும் அவர் மார்பில் நாம் சுகித்திருப்போம்.
Charles H. Spurgeon