“He will be my guide even unto death.” Psalm 48:14.
We need a guide. Sometimes we would give all that we have to be told exactly what to do and where to turn. We are willing to do right, but we do not know which one of two roads we are to follow. Oh, for a guide!
The Lord our God condescends to serve us as guide. He knows the way and will pilot us along it till we reach our journey’s end in peace. Surely we do not desire more infallible direction. Let us place ourselves absolutely under His guidance, and we shall never miss our way. Let us make Him our God, and we shall find Him our guide. If we follow His law we shall not miss the right road of life, provided we first learn to lean upon Him in every step that we take.
Our comfort is that as He is our God forever and ever, He will never cease to be with us as our guide. “Even unto death” will He lead us, and then we shall dwell with Him eternally and go no more out forever. This promise of divine guidance involves lifelong security: salvation at once, guidance unto our last hour, and then endless blessedness. Should not each one seek this in youth, rejoice in it in middle life, and repose in it in old age? This day let us look up for guidance before we trust ourselves out-of-doors.
முழு தூரமும் நம் வழித்துணையானவர்
மரணபரியந்தம் நம்மை நடத்துவார். சங்.48:14.
நமக்கு வழித்துணை மிகவும் தேவை. ஒவ்வொரு சமயம் நாம் செய்யவேண்டியதையும் எங்கு திரும்ப வேண்டும் என்பதையும் குறித்து திட்டமான விபரங்கள் கொடுப்பவருக்கு நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கக்கூட நாம் ஆயத்தமாய் இருப்போம். சரியான பாதையில் செல்லு வேண்டும் என்ற ஆசை நமக்கு உண்டு. ஆனால் இரண்டு பாதைகளில் எதில் செல்லலாம் என்று எமக்குத் தெரிவதில்லை. அப்போது வழித்துணைக்காக ஏங்குகிறோம்.
நம் தேவனாகிய கர்த்தர் நமக்கு வழித்துணையாகத் திருவுளங் கொள்ளுகிறார். அவருக்குப் பாதை தெரியும். சமாதானமாக நம் பயணத்தின் இறுதியை அடையும்வரை நமக்குச் சரியான பாதையைக் காட்டுவார். இதைவிடப் பிழையில்லாத வழிகாட்டுதலை நாம் விரும்பமாட்டோம் என்பது உண்மை அல்லவா? நம்மை முழுவதுமாக அவர் வழிநடத்தலுக்கு ஒப்புக்கொடுப்போமாக அப்படியானால் நாம் ஒருபோதும் வழி தவறமாட்டோம். அவரை நம் தேவனாகக் கொண்டால் அவர் நம் வழிகாட்டி என்பதைக் காண்போம். நாம் அவர் மேல் சார்ந்தே அடி எடுத்து வைத்து அவர் கட்டளைகளையும் கைக்கொள்வோமானால் சரியான பாதையிலிருந்து தவறமாட்டோம்.
அவர் நித்தியமாக நம் கடவுளாய் இருப்பதால் எப்போதும் நம் வழிகாட்டியாகவே இருப்பார் என்பதே நம் ஆறுதல். மரண பரியந்தம் நம்மை வழிநடத்துவார். தெய்வீக வழிநடத்துதலைக் குறித்த இந்த வாக்குறுதி ஆயுள் பரியந்தம் பாதுகாப்பு அளிப்பதோடும் தொடர்பு உள்ளதாய் இருக்கின்றது. அதாவது உடனே இரட்சிப்புகிடைக்கும். நம் இறுதி மூச்சு வரை வழிநடத்தப்படுவோம். முடிவில்லாத பேரின்பம் அடைவோம். ஒவ்வொருவரும் நிச்சயமாக வாலிபத்தில் இதைத்தேடி இடைப்பட்ட காலத்தில் இதில் திளைத்து முதிர் வயதில் இதில் மனஅமைதி அடைய வேண்டும் அல்லவா? இன்று நாம் வீட்டைவிட்டு வெளியே செல்லு முன் ஆண்டவரின் வழிநடத்து தலைத் தேடுவோமாக.
Charles H. Spurgeon