“And I will betroth you to me forever. I will betroth you to me in righteousness and in justice, in steadfast love and in mercy. I will betroth you to me in faithfulness. And you shall know the Lord.” Hosea 2:19-20.
Betrothment unto the Lord! What an honor and a joy! My soul, is Jesus indeed thine by His own condescending betrothal? Then, mark it is forever. He will never break His engagement, much less sue out a divorce against a soul joined to Himself in marriage bonds.
Three times the Lord says, “I will betroth thee.” What words He heaps together to set forth the betrothal! Righteousness comes in to make the covenant legal; none can forbid these lawful bans. Judgment sanctions the alliance with its decree: none can see folly or error in the match. Lovingkindness warrants that this is a love union, for without love betrothal is bondage and not blessedness. Meanwhile, mercy smiles and even sings; yea, she multiplies herself into “mercies” because of the abounding grace of this holy union.
Faithfulness is the registrar and records the marriage, and the Holy Spirit says “Amen” to it as He promises to teach the betrothal heart all the sacred knowledge needful for its high destiny, What a promise!
நிலையான வாக்குறுதி
நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன். நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய். ஓசி.2:19-20.
ஆண்டவரால் விவாகத்துக்கென்று நியமிக்கப்பட்டிருத்தல் எவ்வளவு மகிழ்ச்சியும் மேன்மையுமானது! என் ஆத்துமாவே ஆண்டவர் காட்டின கருணையினால் இயேசு உண்மையாகவே உன்னுடையவரா? இது நித்திய விவாகத்துக்கென்று என்பதை அறிந்து கொள். அவர் ஒருநாளும் இந்தப் பிணைப்பை முறிக்கவும் மாட்டார். விவாகத்தினால் தன்னோடு இணைக்கப்பட்ட ஆத்துமாவை விவாகரத்து செய்யவும் மாட்டார்.
உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன் என்று மூன்று முறை சொல்லுகிறார். இவ்விதம் நியமித்துக் கொள்வதை விளக்க என்னென்ன வார்த்தைகளை அடுக்கியிருக்கிறார் பாருங்கள். இது நீதியாய் செய்யப்படுவதால் இது சட்டத்தின் உடன்பாடு உடையது. யாரும் இதைத் தடை செய்ய முடியாது. இது நியாயமாய் செய்யப்படுவதனால் இது முடிவானது. இது மாற்ற முடியாதது என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் எவரும் எந்தக் குற்றமும் காணமுடியாது. இது கிருபையால் நிறைவேற்றப்படுவதால் இது அன்பினால் ஏவப்பட்ட பிணைப்பாகும். அன்பு இல்லாவிட்டால் அடிமைத்தனம் ஆனதும் ஆசீர்வாதம் அற்றதும் ஆகும். உருக்கமான இரக்கமும் இதில் இடம் பெறுகிறது. இணைப்பில் கிருபை நிறைந்திருப்பதால் உருக்கமான இரக்கங்களும் நிறைவாய் இருக்கின்றன.
உண்மையாய்ச் செய்யப்படுவதால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவரும் இதை ஏற்றுக் கொண்டு இந்த மகிமையான நிலைக்கேற்றபடி புனித அறிவு அளிப்பதாக வாக்களிக்கிறார். இது எவ்வளவு சிறந்த வாக்குறுதியாகும் என்று நினைத்துப் பாருங்கள்.
Charles H. Spurgeon.