“Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time.” 1 Peter 5:6.
This is tantamount to a promise: if we will bow down, the Lord will lift us up. Humility leads to honor; submission is the way to exaltation. That same hand of God which presses us down is waiting to raise us up when we are prepared to bear the blessing. We stoop to conquer. Many cringe before men and yet miss the patronage they crave; but he that humbles himself under the hand of God shall not fail to be enriched, uplifted, sustained, and comforted by the ever-gracious One. It is a habit of Jehovah to cast down the proud and lift up the lowly.
Yet there is a time for the Lord’s working. We ought now to humble ourselves, even at this present moment; and we are bound to keep on doing so whether the Lord lays His afflicting hand upon us or not. When the Lord smites, it is our special duty to accept the chastisement with profound submission. But as for the Lord’s exaltation of us, that can only come “in due time,” and God is the best judge of that day and hour. Do we cry out impatiently for the blessing? Would we wish for untimely honor? What are we at? Surely we are not truly humbled, or we should wait with quiet submission. So let us do.
அடங்கியிரு, உயர்த்தப்படு
ஆகையால் ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 1.பேது.5:6.
இது ஒரு வாக்குறுதிக்கு ஒப்பானது. நாம் அடங்கியிருந்தால் ஆண்டவர் நம்மை உயர்த்துவார். இப்பொழுது தாழ்மையாயிருத்தல் பின் நன் மதிப்பு பெறச் செய்கிறது. உயர்த்தப்படுவதற்கு வழி பணிவான நடத்தையாகும். நம்மை அடக்கி வைத்திருக்கும் அதே ஆண்டவரின் கை அவர் ஆசீர்வாதங்களைப் பெற நாம் ஆயத்தமாயிருக்கும் போது நம்மைத் தூக்கிவிடக் காத்திருக்கிறது. இறுதியில் வெற்றி பெறுவதற்காக இப்பொழுது நாம் பணிந்து செல்கிறோம். பலர் மனிதர் முன் கூனிக்குறுகி நடக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்கும் ஆதரவைப் பெறத் தவறுகிறார்கள். ஆனால் கடவுளின் கையின் கீழ் அடங்கியிருப்பவன் எப்பொழுதும் கிருபை பொருந்தினவராய் இருக்கும் அவரால் மதிப்படையவும் உயர்த்தப்படவும் ஊக்குவிக்கப்படவும் ஆறுதலடையவும் தவறுவதில்லை. பெருமையானவர்களை ஒதுக்கித் தள்ளுவதும் தாழ்மையானவர்களை உயர்த்துவதும் யேகோவாவின் பழக்கமாகும்.
ஆயினும் ஆண்டவர் கிரியை செய்வதற்கு குறித்த காலம் என்று ஒன்று உண்டு. இப்போதே இந்தவினாடியே நாம் தாழ்மையுள்ளவர்கள் ஆகவேண்டும். நாம் துயருற்றாலும் இல்லை என்றாலும் தாழ்மையுள்ளவர்களாகவே இருக்க வேண்டும். ஆண்டவர் சிட்சிக்கும் போது அந்த சிட்சையை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்வது நம் கடமையாகும். அவர் ஏற்ற காலத்திலே நம்மை உயர்த்துவார். அந்த நாளும் நேரமும் எதுவெனக் குறிக்கச் சிறந்தவர் கடவுளே. நாம் பொறுமையற்று ஆசீர்வாதத்துக்காக வேண்டிக் கொள்கிறோமா ? உரிய காலத்துக்கு முன்பதாகவே மேன்மையடைய வேண்டுமென்று விரும்புகிறோமா? அப்படியானால் நாம் இன்னமும் தாழ்மையுள்ளவர்கள் ஆகவில்லை. நாம் பணிவாகக் காத்திருக்க வேண்டும். அவ்விதம் இருப்போமாக !
Charles H. Spurgeon