“But go, tell his disciples and Peter, ‘He is going ahead of you into Galilee. There you will see him, just as he told you.’” Mark 16:7.
Where He appointed to meet His disciples, there He would be in due time. Jesus keeps His trust. If He promises to meet us at the mercy seat, or in public worship, or in the ordinances, we may depend upon it that He will be there. We may wickedly stay away from the appointed meeting place, but He never does. He says, “Where two or three are met together in my name, there am I”; He says not, “There will I be,” but, “I am there already.”
Jesus is always first in fellowship: “He goeth before you.” His heart is with His people, His delight is in them, He is never slow to meet them. In all fellowship He goeth before us.
But He reveals Himself to those who come after Him: “There shall ye see him.” Joyful sight! We care not to see the greatest of mere men, but to see Him is to be filled with joy and peace. And we shall see Him, for He promises Himself to them. Rest assured that it will be so, for He does everything according to His word of promise: “As he said unto you. Catch at those last words, and be assured that to the end He will do for you “as he said unto you.”
அவரே முதலில் தோழமைகொள்கிறார்
உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்கு சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள். மாற்.16:17.
இயேசு எங்கே தம்முடைய சீடரைச் சந்திப்பதாகக் காலங்குறித்திருக்கிறாரோ அங்கே குறித்த நேரத்தில் இருப்பார். இயேசு தாம் குறிப்பிட்டிருந்த இடத்தில் கண்டிப்பாகச் சந்திப்பார். கிருபாசனத்திலும், பொது ஆராதனைகளிலும், கட்டளைகளிலும் நம்மைச் சந்திப்பதாக வாக்களித்திருந்தால் அங்கே கண்டிப்பாக இருப்பார் என்று நாம் திட்டாய் நம்பலாம். சந்திக்கக் குறிப்பிட்ட இடத்துக்கு நாம் போகாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நாளும் அவ்விதம் செய்வதில்லை. அவர் இரண்டு பேராவது மூன்று பேராவது என் நமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் அங்கே நான் இருப்பேன் என்று சொல்லவி;ல்லை, ஆனால் ஏற்கெனவே அங்கே இருக்கிறேன் என்று சொல்கிறார்.
இயேசுவே எப்போதும் முதலில் தோழமை கொள்கிறார். அவர் உங்களுக்கு முன்னே….. போகிறார். அவர் இதயம் அவர் மக்களோடு இருக்கிறது. அவர்களில் மகிழுகிறார். அவர்களைச் சந்திக்க அவர் தாமதிப்பதில்லை. முழு தோழமையோடு அவர் நமக்கு முன்னே போகிறார்.
ஆனால் அவரைப் பின் செல்லுகிறவர்களுக்கே தம்மை வெளிப்படுத்துகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள். எவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் காட்சி. மனிதரில் பெரியவர்களைக் காண நாம் அக்கறை கொள்வதில்லை. ஆனால் இயேசுவைக் காண்பதால் மகிழ்ச்சியாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம். நாம் கண்டிப்பாக அவரைக் காண்போம். ஏனெனில் அவரை விசுவாசிக்கிறவர்களிடம் வந்து, தம்மை வெளிப்படுத்துவதாக அவர் வாக்களிக்கிறார். அது அவ்விதமே நடக்கும் என்று நம்பி, அமர்ந்திருங்கள். ஏனெனில் அவர் தம் வாக்குப்படி எல்லாவற்றையும் செய்கிறார். உங்களுக்குச் சொன்னபடியே என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தைகளைக் கவனத்தில் கொண்டு உங்களுக்குச் சொன்னபடியே இறுதிவரை செய்வார் என்று அமர்ந்திருங்கள்.
Charles H. Spurgeon