“Just as the living Father sent me and I live because of the Father, so the one who feeds on me will live because of me.” John 6:57.
We live by virtue of our union with the Son of God. As God-man Mediator, the Lord Jesus lives by the self-existent Father who has sent Him, and in the same manner we live by the Savior who has quickened us. He who is the source of our life is also the sustenance of it. Living is sustained by feeding. We must support the spiritual life by spiritual food, and that spiritual food is the Lord Jesus. Not His life, or death, or offices, or work, or word alone, but Himself, as including all these. On Jesus Himself we feed.
This is set forth to us in the Lord’s Supper, but it is actually enjoyed by us when we meditate upon our Lord, believe in Him with appropriating faith, take Him into ourselves by love, and assimilate Him by the power of the inner life. We know what it is to feed on Jesus, but we cannot speak it or write it. Our wisest course is to practice it and to do so more and more. We are entreated to eat abundantly, and it will be to our infinite profit to do so when Jesus is our meat and our drink.
Lord, I thank Thee that this, which is a necessity of my new life, is also its greatest delight. So, I do at this hour feed on Thee.
உணவு பெற்று ஆதரிக்கப்படுதல்
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். யோ.6:57.
தேவனுடைய குமாரனோடு நாம் ஐக்கியப்பட்டிருப்பதால் பிழைத்திருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தராய் இருந்து தம்மை அனுப்பின பிதாவால் பிழைத்திருக்கிறார். அதே விதமாக நம்மை உயிர்ப்பித்த இரட்சகராலே நாம் பிழைத்திருக்கிறோம். நம் உயிருக்கு ஆதாரமானவர் அதை ஆதரித்தும் வருகிறார். நமக்கு உணவு அளிக்கப்படுவதால் வாழ ஆதரிக்கப்படுகிறோம். ஆவியின் வாழ்க்கையை ஆவியின் உணவினால் ஆதரிக்க வேண்டும். ஆவியின் உணவு ஆண்டவர் இயேசுவே. அவர் வாழ்க்கையும் மரணமும் வேலையும் வார்த்தையும் மட்டுமல்ல. ஆனால் இவையெல்லாம் ஒழுங்கமைந்த அவராலேயே இயேசுவிலேயே நாம் உணவு பெறுகின்றோம்.
இது திருவிருந்தில் நமக்கு அளிக்கப்படுகிறது. அதோடு நாம் ஆண்டவரைப் பற்றித் தியானிக்கும் போதும் அதை அனுபவித்து மகிழ்கிறோம். அவருக்குத் தகுதியான நம்பிக்கையினால் அவரை விசுவாசிக்கிறோம். அன்பினால் அவரை நமக்கு உரியவராக ஏற்றுக்கொள்கிறோம். நம் உள்மனம் உயிர்த்துடிப்புடன் இருப்பதன் காரணமாக ஏற்பட்டுள்ள ஆற்றலினால் அவரோடு ஒன்றாக இணைக்கப்படுகிறோம். இயேசுவின் சரீரத்தை உட்கொள்வதைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் அதைப்பேச அல்லது எழுத இயலாது. ஞானமான முறை அதில் பயிற்சி பெறுவதும் பெற்றுக் கொண்டே இருப்பதும் ஆகும். அதை அளவின்றி உட்கொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவே நம் உணவும் நாம் பருகும் நீருமாய் இருக்கும்போது அவ்விதம் செய்வது மிகுதியான பலனை அளிக்கும்.
ஆண்டவரே இதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இது என் புது வாழ்க்கைக்குத் தேவையானதாயும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாயும் இருக்கிறது. ஆகவே இப்போதே உம்மை உட்கொள்கிறேன்.
Charles H. Spurgeon