“They that sow in tears shall reap in joy.” Psalm 126:5.
Weeping times are suitable for sowing: we do not want the ground to be too dry. Seed steeped in the tears of earnest anxiety will come up all the sooner. The salt of prayerful tears will give the good seed a flavor which will preserve it from the worm: truth spoken in awful earnestness has a double life about it. Instead of stopping our sowing because of our weeping, let us redouble our efforts because the season is so propitious.
Our heavenly seed could not fitly be sown laughing. Deep sorrow and concern for the souls of others are a far more fit accompaniment of godly teaching than anything like levity. We have heard of men who went to war with a light heart, but they were beaten; and it is mostly so with those who sow in the same style.
Come, then, my heart, sow on in thy weeping, for thou has the promise of a joyful harvest. Thou shalt reap. Thou, thyself, shalt see some results of thy labor. This shall come to thee in so large a measure as to give thee joy, which a poor, withered, and scanty harvest would not do. When thine eyes are dim with silver tears, think of the golden corn. Bear cheerfully the present toil and disappointment; for the harvest day will fully recompense thee.
கண்ணீருக்குப் பின் கெம்பீரமான அறுவடை
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். சங்.126:5.
கண்ணீர்விடும் காலங்கள் விதைப்பதற்கு ஏற்றவை. பூமி காய்ந்து இருப்பதை நாம் விரும்புவதில்லை. அக்கறையாகிய கண்ணீர் கசிந்தொழுகும் விதை சீக்கிரத்தில் முளைக்கும். வேண்டுதலோடு கூடிய கண்ணீரிலுள்ள உறுப்பானது நல்ல விதைக்கு நறுமணச் சுவை அளிக்கும். அது புழுக்கள் அரிக்காதபடி அதைப் பாதுகாக்கும். பயபக்தி நிறைந்த மெய்யார்வத்தோடு பேசிய உண்மை நீடித்த வாழ்வு உள்ளது. ஆகையால் நம் அழுகையினால் விதைப்பதை நிறுத்திவிடாமல், அது விதைப்பதற்கு ஏற்ற காலம் ஆனபடியால் நம் முயற்சிகளை இருமடங்கு ஆக்குவோம்.
பரலோகத்து விதையை மகிழ்ச்சியுடன் விதைப்பது ஏற்றதல்ல. கடவுளைப்பற்றி போதிக்கும்போது பொறுப்பற்ற போக்கில் போதிக்காமல் மற்றவர்களின் ஆத்துமாக்களைக் குறித்து ஆழ்ந்த துக்கமும் கவலையும் உள்ளவர்களாய்ப் போதிப்பது நல்லது. கவலை இல்லாமல் போருக்குச் சென்றவர்களைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவ்விதமாக விதைப்பவர்களும் அவர்களைப்போன்றே இருப்பார்கள்.
என் இதயமே, கண்ணீரோடு நீ விதைப்பாயாக. ஏனெனில், நீ கெம்பீரத்தோடு அறுவடை செய்வாய் என்னும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீ கண்டிப்பாக அறுவடை செய்வாய். உன் ஊழியத்தின் பலனை நீயே காண்பாய். அது உனக்கு மகிழ்ச்சி அளிக்கத்தக்கதாய் இருக்கும். காய்ந்துபோனதும் நன்றாய் விளையாததுமான பயிர்களை அறுவடை செய்வது இவ்வித மகிழ்ச்சியை அளிக்காது. கண்ணீரால் உன் பார்வை மங்கலாக இருக்கும்போது பொன் போன்ற மணிகளாலான விளைச்சலை நினைத்துப் பார். இக்காலத்து உழைப்பையும் ஏமாற்றத்தையும் மகிழ்ச்சியாக சகித்துக்கொள். ஏனெனில் நீ ஊழைப்புக்கேற்ற ஊதியத்தை அறுவடை செய்வாய்.
Charles H. Spurgeon