“For I am with you to save you, declares the Lord; I will make a full end of all the nations among whom I scattered you, but of you I will not make a full end. I will discipline you in just measure, and I will by no means leave you unpunished.” Jeremiah 30:11.
To be left uncorrected would be a fatal sign: it would prove that the Lord had said, “He is given unto idols, let him alone.” God grant that such may never be our portion! Uninterrupted prosperity is a thing to cause fear and trembling. As many as God tenderly loves He rebukes and chastens: those for whom He has no esteem He allows to fatten themselves without fear, like bullocks for the slaughter. It is in love that our heavenly Father uses the rod upon His children.
Yet see, the correction is in measure”: He gives us love without measure but chastisement “in measure.” As under the old law no Israelite could receive more than the “forty stripes save one,” which ensured careful counting and limited suffering; so is it with each afflicted member of the household of faith-every stroke is counted. It is the measure of wisdom, the measure of sympathy, the measure of love, by which our chastisement is regulated. Far be it from us to rebel against appointments so divine. Lord, if Thou standest by to measure the bitter drops into my cup, it is for me cheerfully to take that cup from Thy hand and drink according to Thy directions, saying, “Thy will be done.”
கட்டுப்பாட்டுக்குள்ளான சிட்சிப்பு
உன்னை… மட்டாய்த் தண்டிப்பேன். எரேமி.30:11.
தண்டிக்கப்படாமல் விட்டுவிடப்படுதல் அழிவடையும் நிலையாகும். அவன் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். அவனைப் போகவிடு என்று ஆண்டவர் சொல்வதை அது மெய்ப்பிக்கும். இந்நிலை நமக்கு ஏற்படாதவாறு கடவுள் கிருபை செய்வாராக! இடையறாத வாழ்வு அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். யார் யாரை ஆண்டவர் அதிகமாக நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்து, தண்டிக்கிறார். யார்மேல் அவருக்கு மதிப்பு இல்லையோ அவர்களை அடிக்கப்பட இருக்கும் காளைகளைப்போல அச்சமில்லாமல் கொழுத்து வளர விடுகிறார். அவர் பிள்ளைகளைத் தண்டிக்கிறார்.
மட்டாய்த் தண்டிப்பேன் என்று அவர் கூறியிருப்பதைக் கவனித்துப் பாருங்கள். அவர் அன்பை அளவில்லாமல் அளிக்கிறார். ஆனால் தண்டனையை மட்டாய் அனுப்புகிறார். நியாயப்பிரமாணத்தின்படி எந்த இஸ்ரவேலனையும் நாற்பது அடிவரைக்கும்தான் அடிக்கலாம். அதனால் அடிக்கும்போது கவனமாய் எண்ணவேண்டும். அடிப்பதனால் ஏற்படும் துன்பமும் வரம்புக்குட்பட்டே இருக்கும். அதேவிதமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவராய்த் துன்பம் அனுபவிக்கும் ஒவ்வொருவர்மேல் விழும் ஒவ்வொரு அடியும் எண்ணப்படும். மட்டான ஞானம், மட்டான இரக்கம், மட்டான அன்பின் மூலம் நம் தண்டனை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வளவு தெய்வீகமான தீர்ப்புக்கு எதிராக நாம் கலகம் செய்யாதிருப்போமாக. ஆண்டவரே, என் பாத்திரத்தில் விழும் கசப்பான துளிகளை எண்ண நீர் அருகிலேயே இருந்தால் மகிழ்ச்சியுடன் அந்தப் பாத்திரத்தை உம் கையிலிருந்து வாங்கி, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று சொல்லிக்கொண்டே உம் கட்ளைப்படி அதைப் குடிப்பேனாக.
Charles H. Spurgeon