“His servants shall serve him: and they shall see his face; and his name shall be in their forehead.” Revelation 22:3-4.
Three choice blessings will be ours in the gloryland.
“His servants shall serve him.” No other lords shall oppress us, no other service shall distress us. We shall serve Jesus always, perfectly, without weariness, and without error. This is heaven to a saint: in all things to serve the Lord Christ and to be owned by Him as His servant is our soul’s high ambition for eternity.
“And they shall see his face.” This makes the service delightful: indeed, it is the present reward of service. We shall know our Lord, for we shall see Him as He is. To see the face of Jesus is the utmost favor that the most faithful servant of the Lord can ask. What more could Moses ask than-“Let me see thy face?”
“And his name shall be in their foreheads.” They gaze upon their Lord till His name is photographed upon their brows. They are acknowledged by Him, and they acknowledge Him. The secret mark of inward grace develops into the public sign-manual of confessed relationship.
O Lord, give us these three things in their beginnings here that we may possess them in their fullness in Thine own abode of bliss!
அவர் சேவை, அவர் சமூகம், அவர் நாமம்
அவருடைய ஊழியக்காரர் அவரைச்சேவித்து அவருடைய சமூகத்தைத் தரிசிப்பார்கள். அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். வெளி 22:4.
மகிமையின் நாட்டில் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் நம்முடையவையாய் இருக்கும்.
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
வேறெந்த தலைவரும் நம்மை ஒடுக்கமாட்டார்கள். எந்த வேலையும் நமக்குத் தொல்லை உண்டுபண்ணாது. நாம் எப்போதும் தளர்ச்சியோ தளர்வோ இல்லாமல் இயேசுவைச் சேவிப்போம். இதுதான் விசுவாசிக்கு மோட்சமாகும். ஆண்டவர் இயேசுவை எல்லா வகையிலும் சேவிப்பதும் அவர் நம்மைத் தம் ஊழியக்காரர் என்று ஏற்றுக் கொள்வதுமே நித்தியத்துக்கு நம் ஆன்மாவின் குறிக்கோளாகும்.
அவருடைய சமூகத்தைத் தரிசிப்பார்கள்
இது சேவையை மகிழ்ச்சி நிறைந்தது ஆக்குகிறது. ஆம் அதுவே சேவையின் இப்போதைய பரிசாகும். நாம் நம் ஆண்டவரை அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிற வண்ணமாக அவரைக் காணலாம். ஆண்டவரின் மிக உண்மையான ஊழியக்காரன் மிகப்பெரிய சலுகை இயேசுவின் முகத்தைக் காணவேண்டும் என்பதே. மோசே நான் உம்முடைய முகத்தைக் காண வேண்டும் என்பதைத் தவிர வேறெதைக்கேட்டிருக்க முடியும்?
அவருடைய நாமம் அவருடைய நெற்றிகளில் இருக்கும்
ஆண்டவரின் நாமம் அவருடைய நெற்றிகளில் காணப்படும்வரை அவர்கள் அவரை உற்றுப்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். அவர் அவர்களைத் தம்முடையவர்கள் என்று ஏற்றுக்கொள்வார்கள். அகத்தின் உள்ளிருக்கும் கிருபையின் இரகசியமான அடையாளம் ஒப்புக் கொள்ளப்பட்ட உறவாக மலரும்.
ஆண்டவரே! இவை மூன்றையும் உம்முடைய ஆசீர்வாதம் நிறைந்த இருப்பிடத்தில் நாங்கள் முழுமையாகப் பெறத்தக்கதாக இங்கேயே அவற்றைப் பெறத்தொடங்க அருளும்.
Charles H. Spurgeon