” I will make a distinction between my people and your people. This sign will occur tomorrow.” Exodus8:23.

Pharaoh has a people, and the Lord has a people. These may dwell together and seem to fare alike, but there is a division between them, and the Lord will make it apparent. Not forever shall one event happen alike to all, but there shall be great difference between the men of the world and the people of Jehovah’s choice.

This may happen in the time of judgments, when the Lord becomes the sanctuary of His saints. It is very conspicuous in the conversion of believers when their sin is put away, while unbelievers remain under condemnation. From that moment they become a distinct race, come under a new discipline, and enjoy new blessings. Their homes, henceforth, are free from the grievous swarms of evils which defile and torment the Egyptians. They are kept from the pollution of lust, the bite of care, the corruption of falsehood, and the cruel torment of hatred, which devour many families.

Rest assured, tried believer, that though you have your troubles you are saved from swarms of worse ones, which infest the homes and hearts of the servants of the world’s prince. The Lord has put a division; see to it that you keep up the division in Spirit, aim, character, and company.

வித்தியாசத்தை நிலைநிறுத்து

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன். யாத்.8:23.

பார்வோனைச் சேர்ந்த மக்களும் இருந்தார்கள். ஆண்டவரைச் சேர்ந்த மக்களும் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் காலம் கழித்தாலும் அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் இருந்தது. ஆண்டவர் அதை வெளிப்படையானதாக்குவார். எப்போதும் எல்லோருக்கும் ஒரே விதமான சம்பவங்கள் நேரிடுவதில்லை. உலகப்பிரகாரமான மக்களுக்கும் யேகோவா தெரிந்துகொண்ட மக்களுக்கும் இடையே பெரிய மாறுபாடு காணப்படும்.

நியாயத்தீர்ப்பு காலத்தில் ஆண்டவர் தம் பரிசுத்தவான்களின் அடைக்கலம் ஆகும்போது இது காணப்படலாம். விசுவாசிகள் மனம் திரும்பி அவர்கள் பாவங்கள் அகற்றப்படும்போது விசுவாசிகள் அல்லாதவர்கள் கண்டனத்துக்குள்ளாய் இருக்கும்போது இந்த வேறுபாடு தெளிவாய்க் காணப்படலாம். அந்த நிமிடத்திலிருந்து விசுவாசிகள் தனிப்பட்ட மக்களாகி புதுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாகி, புது ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். அப்போதிலிருந்து எகிப்தியரைக் கறைப்படுத்துவதும் வேதனைக்கு உட்படுத்துவதுமான பயங்கரமான தீங்குகளிலிருந்து அவர்கள் வீடுகள் விடுதலை பெறுகின்றன. பல குடும்பங்களை வருத்தி அழிக்கும் இச்சை என்னும் தூய்மைக்கேட்டிலிருந்தும், கவலை என்னும் பிடியிலிருந்தும், பொய் என்னும் ஒழுக்கக் கேட்டிலிருந்தும், வெறுப்பு என்னும் கொடிய வேதனையிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

கடுஞ்சோதனைக்குட்படுத்தப்பட்ட விசுவாசியே, எங்களுக்குத் தொல்லைகள் இருந்தாலும் உலகத்தின் அதிபதியான வேலைக்காரர்களின் குடும்பங்களை வருத்தும் பயங்கரமான பலவற்றிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள். ஆண்டவர் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தி உள்ளார். ஆவியிலும், குறிக்கோளிலும், பண்பிலும் அந்த வேறுபாட்டை நிலை நிறுத்துவதைக் குறித்து கவனமாயிருங்கள்.

Charles H. Spurgeon