“In that day shall the Lord defend the inhabitants of Jerusalem: and he that is feeble among them at that day shall be as David; and the house of David shall be as God, as the angel of the Lord before them.” Zechariah 12:8.
One of the best methods of the Lord’s defending His people is to make them strong in inward might. Men are better than walls, and faith is stronger than castles.
The Lord can take the feeblest among us and make him like David, the champion of Israel. Lord, do this with me! Infuse Thy power into me, and fill me with sacred courage that I may face the giant with sling and stone, confident in God.
The Lord can make His greatest champions far mightier than they are: David can be as God, as the angel of Jehovah. This would be a marvelous development, but it is possible, or it would not be spoken of. O Lord, work with the best of our leaders! Show us what Thou art able to do?namely, to raise Thy faithful servants to a height of grace and holiness which shall be clearly supernatural!
Lord, dwell in Thy saints, and they shall be as God; put Thy might into them, and they shall be as the living creatures who dwell in the presence of Jehovah. Fulfill this promise to Thine entire church in this our day, for Jesus’ sake. Amen.
தெளிவான தெய்வநிலை
அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார். அவைகளில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான். தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப் போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள். சக.12:8.
ஆண்டவர் தம் மக்களின் இன்னல் தடுத்துக் காப்பாற்றும் முறைகளில் ஒன்று அவர்களை மனவலிமையும் ஆற்றலும் உள்ளவர்கள் ஆக்குவதேயாகும். சுவர்களை விட மக்கள் சிறந்தவர்கள். விசுவாசம் மாளிகைகளை விட வலிமை வாய்ந்தது.
நம்மில் தள்ளாடினவர்களைக் கூட ஆண்டவர் தூக்கியெடுத்து இஸ்ரவேலின் வீர முதல்வனான தாவீதைப்போல் ஆக்கக்கூடியவர். ஆண்டவரே, என்னை அவ்விதமாக்கும். ஆண்டவரே தேவனில் ஊறுதியான நம்பிக்கை உள்ளவனாக நான் கவணையும் கல்லையும் வைத்துக் கொண்டே இராட்சதனை எதிர்க்கத்தக்கதாக உம் ஆற்றலை என்னுள் செலுத்தி புனித வீரத்தினால் என்னை நிரப்பும்.
ஆண்டவர் தம் சிறந்த வீர முதல்வர்களை அவர்கள் இருப்பதைவிட அதிகமான வலிமை வாய்ந்தவர்கள் ஆக்கக் கூடியவர். இது ஆச்சரியமான வளர்ச்சியாகும். ஆனால் இது நிகழக் கூடியதாகும். அப்படியில்லையெனில் அதைப்பற்றிப் பேசியிருக்க மாட்டார். ஆண்டவரே எங்கள் தலைவர்களில் சிறந்தவர்களிடம் கிரியை செய்யும். உமக்கு உத்தமமான ஊழியக்காரரைக் கிருபையிலும் புனிதத் தன்மையிலும் தெளிவாகவே தெய்வ நிலைக்கு உயர்த்தி நீர் என்ன செய்யக்கூடும் என்பதை எங்களுக்குக் காட்டியருளும். ஆண்டவரே உம் பரிசுத்தவான்களில் வாசம் செய்யும். அப்பொழுது அவர்கள் தெய்வ நிலையினராய் இருப்பார்கள். அவர்களில் உம் ஆற்றல் நிறைந்திருக்கச் செய்யும். அப்பொழுது அவர்கள் யேகோவாவின் சமூகத்தில் வாசம்செய்யும் உயிருள்ளவர்களைப்போல் இருப்பார்கள். எங்கள் காலத்திலேயே உம் சபை முழுவதிலும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் இயேசுவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம் ஆமென்!
Charles H. Spurgeon