“In those days and in that time, declares the Lord, iniquity shall be sought in Israel, and there shall be none, and sin in Judah, and none shall be found, for I will pardon those whom I leave as a remnant.” Jeremiah 50:20.

A glorious word indeed! What a perfect pardon is here promised to the sinful nations of Israel and Judah! Sin is to be so removed that it shall not be found, so blotted out that there shall be none. Glory be unto the God of pardons!

Satan seeks out sins wherewith to accuse us, our enemies seek them that they may lay them to our charge, and our own conscience seeks them even with a morbid eagerness. But when the Lord applies the precious blood of Jesus, we fear no form of search, for “there shall be none”; “they shall not be found.” The Lord hath caused the sins of His people to cease to be: He hath finished transgression and made an end of sin. The sacrifice of Jesus has cast our sins into the depths of the sea. This makes us dance for joy.

The reason for the obliteration of sin lies in the fact that Jehovah Himself pardons His chosen ones. His word of grace is not only royal but divine. He speaks absolution, and we are absolved. He applies the atonement, and from that hour His people are beyond all fear of condemnation. Blessed be the name of the sin-annihilating God!

ஆக்கினைத் தீர்ப்பில்லை

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும். யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவை கிடையாதிருக்கும். நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன். எரேமி.50:20.

இது உண்மையிலேயே மகத்தான வார்த்தை. பாவம் செய்து வந்த யூதாவும் இஸ்ரவேலுமான நாடுகளுக்கு எப்படிப்பட்ட பூரண மன்னிப்பு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். அவர்கள் பாவம் தேடப்படாவிட்டாலும் அது காணப்படாமலிருக்கும். அது இல்லாமற் போகத்தக்கதாக நீக்கப்பட்டுவிடும் மன்னிப்பின் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக!

சாத்தான் நம்மைக் குற்றப்படுத்துவதற்காக நம் பாவங்களைத் தேடி அலைகிறான். நம்மேல் குற்றம் சுமத்துவதற்காக நம் எதிரிகள் அவற்றைத்தேடித் திரிகிறார்கள். நம்முடைய மனச்சாட்சியே மனநிலை திரிந்த ஆர்வத்துடன் அவற்றைத்தேடிப் பார்க்கிறது. ஆனால் தேவன் இயேசுவின் இரத்தத்தைப் பூசும்பொழுது அவர் அவற்றைத் தேடுவார் என்று நாம் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அவை காணாதிருக்கும். அவை கிடையாதும் இருக்கும். ஆண்டவர் தம் மக்களின் பாவங்களை இல்லாதிருக்கப்பண்ணுவார். அவர் பெரும் பாதகங்களுக்கு முடிவு கட்டி பாவங்களை அறவே நீக்கிவிட்டார். இயேசு தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்து நம் பாவங்களைக் கடலின் ஆழத்துக்குத் தள்ளிவிட்டது இது நம்மை மகிழ்ந்து ஆரவாரிக்கச் செய்கிறது.

தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு யேகோவாவே மன்னிப்பு அருளுவதனால் அவை முழுவதுமாக நீக்கப்பட்டு விடுகின்றன. கிருபைநிறைந்த அவர் வார்த்தை வெறும் அரசருக்கு உரியதாய் மட்டும் இல்லாமல் தெய்வீகத்தன்மையும் வாய்ந்தது. அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளிக்கிறார். நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அவர் ஒப்புரவாகுதலை நமக்கு கிடைக்கப்பண்ணுகிறார். நாம் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்த பயம் இல்லாதவர்கள் ஆகிறோம். பாவத்தை நீர் மூலமாக்கும் தேவனின் நாமம் மகிமைப்படுவதாக!

Charles H. Spurgeon