And even to your old age I am he; and even to hoar hairs will I carry you: I have made, and I will bear; even I will carry, and will deliver you.” Isaiah 46:4.
The year is very old, and here is a promise for our aged friends; yes, and for us all, as age creeps over us. Let us live long enough, and we shall all have hoar hairs; therefore we may as well enjoy this promise by the foresight of faith.
When we grow old our God will still be the I AM, abiding evermore the same. Hoar hairs tell of our decay, but He decayeth not. When we cannot carry a burden and can hardly carry ourselves, the Lord will carry us. Even as in our young days He carried us like lambs in His bosom, so will He in our years of infirmity.
He made us, and He will care for us. When we become a burden to our friends and a burden to ourselves, the Lord will not shake us off, but the rather He will take us up and carry and deliver us more fully than ever. In many cases the Lord give His servants a long and calm evening. They worked hard all day and wore themselves out in their Master’s service, and so He said to them, “Now rest in anticipation of that eternal Sabbath which I have prepared for you.” Let us not dread old age. Let us grow old graciously since the Lord Himself is with us in fullness of grace.
அவர் பரம வீட்டுக்கு நம்மைச் சுமந்து செல்வார்
உங்கள் முதிர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்து வந்தேன். இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன். நான் அப்படிச் செய்து வந்தேன். இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசா.46:4.
ஆண்டு முடியும் நிலையில் இருக்கிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்றதான வாக்குறுதி ஒன்று இதோ இருக்கிறது. நமக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. ஆகையால் இது எல்லாருக்கும் ஏற்றதான வாக்குறுதியாகும். நாம் நீண்ட நாள் வாழ்வோமாக! அப்பொழுது முதிர் வயதில் நரை முடி காணப்படும். ஆகையால் நம்பிக்கையின் எதிர்பார்க்குதலின் மூலம் நாமும் இந்த வாக்குறுதியில் மகிழ்ச்சி அடையலாம்.
நாம் முதிர் வயதடையும் போதும் நம் கடவுள் இருக்கிறவராகவே மாறாதவராய் இருப்பார். நரைமுடி நம் உடலின் காலச் சிதைவைக் காட்டுவதாகும். ஆனால் அவர் காலச்சிதைவு அடைவதில்லை. நாம் ஒரு சுமையைத் தூக்க முடியாத நிலையிலும் நம்மையே சுமக்க முடியாத நிலையிலும் இருக்கும் போதும் ஆண்டவர் நம்மைச் சுமப்பார். நம் குழந்தைப் பருவத்தில் ஆட்டுக்குட்டிகளைப் போல் நம்மை மார்பில் சுமந்தார். அதைப்போல நம் பெலவீனமான நிலையிலும் சுமப்பார்.
அவர் நம்மைப் படைத்தார். அவர் நம்மைப் பராமரிப்பார். நாம் நம் நண்பருக்குச் சுமையாகி, நமக்கும் சுமையாகும் போது ஆண்டவர் நம்மை உதறித் தள்ள மாட்டார். நம்மை ஏந்துவார், சுமப்பார், தப்புவிப்பார், அவர் ஊழியக்காரரில் பலரை முதிர்வயதில் சமாதானமாக அமர்ந்திருக்கச் செய்கிறார். அவர்கள் வாழ்நாளில் கடினமாக உழைத்து, உடல் தேய்ந்தவர்களாயிருக்கிறார்கள். ஆண்டவர் அவர்களிடம் உங்களுக்காக நான் ஆயத்தம் பண்ணியிருக்கும் நித்திய ஓய்வு நாளை எதிர்நோக்கி இப்போது இளைப்பாறுங்கள் என்று சொல்லிருக்கிறார். முதிர்வயதைக் குறித்து நாம் திகில் அடையாமல் இருப்போமாக! ஆண்டவர் கிருபையின் நிறைவில் நம்மோடு இருப்பதால் அருளோடு முதிர் வயதடைவோமாக!
Charles H. Spurgeon