“Having loved his own which were in the world, he loved them unto the end.” John 13:1.

This fact is essentially a promise; for what our Lord was He is, and what He was to those with whom He lived on earth, He will be to all His beloved so long as the moon endureth.

“Having loved”: here was the wonder! That He should ever have loved men at all is the marvel. What was there in His poor disciples that He should love them? What is there in me?

But when He has once begun to love, it is His nature to continue to do so. Love made the saints “his own”?what a choice title! He purchased them with blood, and they became His treasure. Being His own, He will not lose them. Being His beloved, He will not cease to love them. My soul, He will not cease to love thee!

The text is well as it stands: “to the end.” Even till His death the ruling passion of love to His own reigned in His sacred bosom. It means also to the uttermost. He could not love them more: He gave Himself for them. Some read it, to perfection. Truly He lavished upon them a perfect love, in which there was no flaw nor failure, no unwisdom, no unfaithfulness.

Such is the love of Jesus to each one of His people. Let us sing to our Well-beloved a song.

பூரணமடையும் வரை அன்பு கூர்ந்தார்

தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார். யோ.13:1.

இச்செய்தி ஒரு வாக்குறுதியேயாகும். ஏனெனில் நம் ஆண்டவர் அக்காலத்தில் இருந்ததைப் போலவே இக்காலத்திலும் இருக்கிறார். அவர் உலகத்திலிருந்த போது அவர்களோடு வாழ்ந்தவரிடம் எப்படி இருந்தாரோ, அவ்விதமே சந்திரன் இருக்கும் வரை அவருக்கு அன்பானவர்களிடமும் இருப்பார்.

அன்பு வைத்தபடியே இதுதான் ஆச்சரியமானது. மனிதனில் அவர் அன்பு வைத்ததே ஆச்சரியமாகும்! ஏழைகளான அவர் சீடர்கள் மேல் அவர் அன்பு வைத்ததற்கு அவர்களில் என்ன இருந்தது? என்னில் என்ன இருக்கிறது?

ஆனால் அவர் ஒரு முறை நேசிக்கத் தொடங்கி விட்டால் தொடர்ந்து நேசிப்பது அவர் தன்மையாகும்: அன்பு பரிசுத்தவான்களை அவர்களுடையதாக்கியது. இது எவ்வளவு சிறந்த பட்டமாகும். அவர் தமது இரத்தத்தினால் அவர்களை விலைக்கு வாங்கினார். அவர்கள் அவர் அரும்பொருள் ஆனார்கள். அவர்கள் அவருடையவர்கள் ஆனபடியால் அவர் அவர்களை இழக்க மாட்டார். அவர்கள் அவருக்கு அருமையானவர்கள் ஆனபடியால் அவர்கள் மேல் அன்பு வைக்காமல் இருக்கமாட்டார். என் ஆன்மாவே, அவர் உன்மேல் அன்பு வைக்காமல் இருக்கமாட்டார்.

மேலே குறிப்பிடப்பட்ட வசனம் முடிவு பரியந்தம் என்று கூறுகிறது. அவர் மரணமடையும்வரை அவருக்குச் சொந்தமானவர்கள் மேல் அவருக்கு இருந்த அன்பு அவர் புனிதமான இதயத்தில் இருந்தது. இது எல்லைக் கோடிவரை என்பதையும் குறிக்கிறது. இதைவிட அதிகமாக அவர் அவர்களில் அன்பு வைக்க முடியாது. அவர்களுக்காகத் தம்மையே ஒப்புக் கொடுத்தார். சிலர் பூரணமடையும் வரை என்று சொல்கிறார்கள். அவர்கள்மேல் குற்றமற்றதும், மாசற்றதும், முட்டாள் தனமற்றதும், நம்பிக்கைக் கேடு அற்றதுமான அன்பைப் பொழிந்தார்.

இயேசுவுக்கு அவர் மக்கள் ஓவ்வொருவர் மேலும் அப்படிப்பட்ட அன்பே இருக்கிறது. நமக்கு அன்பானவர் மேல் ஓரு பாட்டுப் பாடுவோமாக.

Charles H. Spurgeon