And God shall wipe away all tears from their eyes. Revelation 21:4.
Yes, we shall come to this if we are believers. Sorrow shalt cease, and tears shall be wiped away. This is the world of weeping, but it passes away. There shall be a new heaven and a new earth, so says the first verse of this chapter; and therefore there will be nothing to weep over concerning the Fall and its consequent miseries. Read the second verse and note how it speaks of the bride and her marriage. The Lamb’s wedding is a time for boundless pleasure, and tears would be out of place. The third verse says that God Himself will dwell among men; and surely at His right hand there are pleasures forevermore, and tears can no longer flow.
What will our state be when there will be no more sorrow, nor crying, neither shall there be any more pain? This will be more glorious than we can as yet imagine. O eyes that are red with weeping, cease your scalding flow, for in a little while ye shall know no more tears! None can wipe tears away like the God of love, but He is coming to do it. “Weeping may endure for a night, but joy cometh in the morning.” Come, Lord, and tarry not; for now both men and women must weep!
இனி கண்ணீர் சொரிவதில்லை
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். வெளி 21:4.
நாம் விசுவாசிகளானால் இது நம் அனுபவமும் ஆகலாம். இனித் துக்கம் இல்லை. கண்ணீர் யாவும் துடைக்கப்பட்டு விடும். இது அழுகையின் உலகம். ஆனால் இந்நிலை மாறிவிடும். இந்த அதிகாரத்தின் முதல் வசனத்தில் புதிய வானமும் புதிய பூமியும் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் பாவத்தில் விழுந்ததைக் குறித்தாவது, அதனால் ஏற்பட்ட அவலநிலையைக் குறித்தாவது அழவேண்டியதிருக்காது. இரண்டாம் வசனத்தைப் பாருங்கள். அதில் மணப்பெண்ணையும் அவள் திருமணத்தைப் பற்றிக் கூறப்பட்டிருப்பவைகளையும் கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் எல்லையற்ற மகிழ்ச்சிக்கான காலமாகும். அங்கே அழுகைக்கு இடம் இல்லை. மூன்றாம் வசனத்தில் கடவுள் மனிதர்களோடே வாசமாயிருப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். கண்ணீருக்கு இடம் இருக்காது.
துக்கமும், அழுகையும், நோவும் இல்லாத நிலையில் நாம் எப்படி இருப்போம்? நாம் நினைத்துப் பார்ப்பதற்கும் மேலான மகிமை வாய்ந்த நிலையில் இருப்போம். அழுதழுது சிவந்து போன கண்களே, வெந்துயர் கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள். இன்னும் சிறிது காலத்துக்குப்பின் கண்ணீரெல்லாம் மறைந்து விடும். அன்பின் தேவன் கண்ணீரையெல்லாம் துடைப்பது போல் வேறு யாரும் துடைக்க முடியாது. அதைச் செய்ய அவரே வருகிறார். சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் இப்பொழுது ஆண்களும் பெண்களும் அழவேண்டியதாயிருக்கின்றது. ஆண்டவரே வாரும், தாமதியாதேயும்
Charles H. Spurgeon.