“You will be blessed in the city and blessed in the country.” Deuteronomy 28:3.
So was Isaac blessed when he walked therein at eventide to meditate. How often has the Lord met us when we have been alone! The hedges and the trees can bear witness to our joy. We look for such blessedness again.
So was Boaz blessed when he reaped his harvest, and his workmen met him with benedictions. May the Lord prosper all who drive the plow! Every farmer may urge this promise with God, if indeed he obeys the voice of the Lord God.
We go to the field to labor as father Adam did; and since the curse fell on the soil through the sin of Adam the first, it is a great comfort to find a blessing through Adam the second,
We go to the field for exercise, and we are happy in the belief that the Lord will bless that exercise and give us health, which we will use to His glory.
We go to the field to study nature, and there is nothing in a knowledge of the visible creation which may not be sanctified to the highest uses by the divine benediction.
We have at last to go to the field to bury our dead; yea, others will in their turn take us to God’s acre in the field. But we are blessed, whether weeping at the tomb or sleeping in it.
வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நீ வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபா.28:3.
ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ணச் சென்றபோது அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். நாம் தனிமையாக இருந்த பல சமயங்களிலும் ஆண்டவர் நம்மைச் சந்தித்திருக்கிறார் அல்லவா? நாம் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு மரங்களும் புதர்களும் சாட்சி பகரும் அல்லவா? அதே விதமான ஆசீர்வாதத்தை நாம் மறுபடியும் எதிர்பார்க்கிறோம்.
போவாஸ் அறுவடை செய்த சமயம் அவர்கள் வேலையாட்கள் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்று ஆசீர்வதித்தபோது அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். ஏர் உழும் ஒவ்வொருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக. ஒவ்வொரு விவசாயியும் ஆண்டவர் சத்துக்குக் கீழ்ப்படிந்தால் இந்த வாக்குறுதியை வற்புறுத்தலாம்.
ஆதாமைப்போல் வயலில் வேலை செய்ய நாம் போகிறோம். முதல் ஆதாமின் பாவத்தினால் நிலத்தின்மேல் சாபம் விழுந்தது போல, இரண்டாம் ஆதாமின் மூலமாக ஓர் ஆசீர்வாதம் ஏற்பட்டது பெரிய ஆறுதலாகும்.
தேகப்பயிற்சிக்காக நாம் வயல் வெளிக்குச் செல்கிறோம். ஆண்டவர் அந்தத் தேகப்பயிற்சியை ஆசீர்வதித்து, நமக்கு நற்சுகம் அளிப்பார் என்றும், அச்சுகத்தை அவர் மகிமைக்காகப் பயன்படுத்துவோம் என்றும் நம்பி மகிழ்ச்சி அடைகிறோம்.
இயற்கையை ஆராய்வதற்காக வயல் வெளிக்குச் செல்கிறோம். அந்த அறிவு தேவனுடைய ஆசீர்வாதத்தினால் பயனுள்ள முறையில் பயன்பட புனிதப்படுத்தப்படும் என்னும் நம்பிக்கையேயல்லாமல் அதைப் பார்ப்பதினால் மட்டும் பயன் ஏற்படாது.
இறுதியாக இறந்தவர்களை அடக்கம் பண்ணுவதற்காக வயல் வெளிக்குச் செல்கிறோம். நாம் இறந்த பின்னும் மற்றவர்கள் நம்மை அங்கு எடுத்துச் செல்வார்கள். கல்லறையில் அழுகிறவர்களாய் இருந்தாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவோம்.
Charles H. Spurgeon