“And you will be called priests of the Lord, you will be named ministers of our God. You will feed on the wealth of nations, and in their riches you will boast.” Isaiah 61:6.
This literal promise to Israel belongs spiritually to the seed after the Spirit, namely, to all believers. If we live up to our privileges, we shall live unto God so clearly and distinctly that men shall see that we are set apart for holy service and shall name us the priests of the Lord. We may work or trade as others do, and yet we may be solely and wholly the ministering servants of God. Our one occupation shall be to present the perpetual sacrifice of prayer, and praise, and testimony, and self-consecration to the living God by Jesus Christ.
This being our one aim, we may leave distracting concerns to those who have no higher calling. “Let the dead bury their dead.” It is written, “Strangers shall stand and feed your flocks, and the sons of the alien shall be your plowmen and your vine-dressers,” They may manage politics, puzzle out financial problems, discuss science, and settle the last new quibbles of criticism; but we will give ourselves unto such service as becomes those who, like the Lord Jesus, are ordained to a perpetual priesthood.
Accepting this honorable promise as involving a sacred duty, let us put on the vestments of holiness and minister before the Lord all day long.
பிரித்து வைக்கப்பட்டவர்கள்
நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள். ஏசா.61:6.
இஸ்ரவேலுக்கென்று கொடுக்கப்பட்ட இந்த வாக்குறுதி ஆவியின் வித்தானவர்களுக்கு, அதாவது எல்லா விசுவாசிகளுக்கும் ஆவியின் பிரகாரமாக உரியதாகும். நாம் நம் உரிமைகளுக்கேற்றபடி வாழ்ந்தால் கடவுளுக்கென்று தெளிவாகவும், தனிமாதிரியாகவும் வாழ்வோம். ஆகையால் நாம் தூய ஊழியத்திற்கென்று தனியே பிரத்து வைக்கப்பட்டவர்கள் என்று மக்கள் கண்டு, நம்மைக் கர்த்தரின் ஆசாரியர் என்பார்கள். மற்றவர்களைப்போல் நாம் வேலைசெய்கிறவர்களாகவும், வியாபாரம் செய்கிறவர்களாகவும் இருக்கலாம். ஆயினும் நாம் முழுவதுமாக கடவுளின் ஊழியத்தைச் செய்பவர்களாகவே இருப்போம். நம்முடைய ஒரே பணி இயேசு கிறிஸ்துவின்மூலமாகக் கடவுளுக்கு நம்மைப் படைத்து, நிலைத்த பலியான வேண்டுதலையும், துதியையும், சான்றுரையையும் ஏறெடுப்பதாகும்.
இதுவே நம்முடைய நோக்கமாயிருப்பதால் கவனமாற்றம் ஏற்படுத்தக்கூடிய மற்ற வேலைகளை நம்மைப் போல் உயரிய சேவை செய்ய அழைக்கப்படாதவர்களுக்கு விட்டுவிடலாம். மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். மறு ஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத் தோட்டக்காரருமாயிருப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே. அவர்கள் அரசியலில் ஈடுபடட்டும். நிதி பற்றிய சிக்கல்களைத் தீர்த்து வைக்கட்டும், விஞ்ஞானத்தை ஆராயட்டும், திறனாய்வு வாதங்களைச் சரி பார்க்கட்டும். ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவைப்போல நித்திய கட்டளையாக ஆசாரிய ஊழியத்துக்குப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவர்களாக அவ்வித பணிக்கு நம்மை அர்ப்பணிப்போமாக.
இந்த வாக்குறுதி புனிதமான கடமை ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, தூய்மைக்கான ஆடைகளை அணிந்துகொண்டு, ஆண்டவர் முன்னிலையில் நாள் முழுவதும் சேவை செய்வோமாக.
Charles H. Spurgeon.