“Remember these things, Jacob, for you, Israel, are my servant. I have made you, you are my servant; Israel, I will not forget you.” Isaiah 44:21.

Our Jehovah cannot so forget His servants as to cease to love them. He chose them not for a time but forever. He knew what they would be when He called them into the divine family. He blots out their sins like a cloud; and we may be sure that He will not turn them out of doors for iniquities which He has blotted out. It would be blasphemy to imagine such a thing.

He will not forget them so as to cease to think of them. One forgetful moment on the part of our God would be our ruin. Therefore He says, “Thou shalt not be forgotten of me,” Men forget us; those whom we have benefited turn against us. We have no abiding place in the fickle hearts of men; but God will never forget one of His true servants. He binds Himself to us not by what we do for Him but by what He has done for us. We have been loved too long and bought at too great a price to be now forgotten. Jesus sees in us His soul’s travail, and that He never can forget. The Father sees in us the spouse of His Son, and the Spirit sees in us His own effectual work. The Lord thinketh upon us. This day we shall be succored and sustained. Oh, that the Lord may never be forgotten of us!

மறக்கப்படவில்லை

நீ என் தாசன். இஸ்ரவேலே நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசா.44:21.

யேகோவா தம் தாசரில் அன்புகூருவதை நிறுத்தத்தக்கதாக அவர்களை மறப்பதில்லை. அவைகளைச் சிறிது காலத்திற்காக என்று அல்ல, நித்தியத்திற்காகத் தெரிந்துகொண்டுள்ளார். அவர்களைத் தெய்வீகக் குடும்பத்தில் சேர்த்துக்கொண்டபோதே அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று அறிந்திருந்தார். அவர்கள் பாவங்களை மேகத்தைப்போல அவர் நீக்கிவிட்டார். நீக்கப்பட்ட பாவங்களுக்காக அவர்களைத் துரத்திவிடமாட்டார் என்று நாம் திட்டமாய் நம்பலாம். துரத்திவிடுவாரோ என்று நினைத்துப் பார்ப்பதுகூட தேவதூஷணமாகும்.

அவர்களைப்பற்றி நினைக்காமல் இருக்கத்தக்கதாக அவர்களை மறக்கவும் மாட்டார். அவர் நம்மை ஒரு வினாடி மறந்தால்கூட நாம் அழிந்துவிடுவோம். ஆகையால் அவர் நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்கிறார். மனிதர் நம்மை மறந்துவிடுகிறார்கள். நாம் நன்மை செய்தவர்கள் நமக்கு விரோதிகள் ஆகிறார்கள். அடிக்கடி மாறும் இயல்புகள் மக்களின் இதயத்தில் நமக்கு நிலையான இடம் இருப்பதில்லை. ஆனால் கடவுள் தம் உண்மையான ஊழியர் ஒருவரை ஒருநாளும் மறப்பதில்லை. அவர் நாம் செய்கிறவைகளுக்கல்லாமல் தாம் செய்தவைகளுக்காகவே நம்மைத் தம்மோடு பிணைத்துக்கொள்கிறார். நாம் அதிகமான விலைகொடுத்து வாங்கப்பட்டதுமல்லாமல் அதிக காலம் நேசிக்கப்பட்டும் வந்துள்ளபடியால் இப்போது மறக்கப்படமுடியாது. பிதா நம்மில் தம் குமாரனின் மணவாட்டியைக் காண்கிறார். பரிசுத்த ஆவி நம்மில் தம் பயனுள்ள வேலையைக் காண்கிறார். ஆண்டவர் நம்மைப் பற்றி நினைக்கிறார். இன்று நாம் உதவிபெற்றவர்களாயும், தாங்கிப்பிடிக்கப்பட்டவர்களாயும் இருப்போம். ஆண்டவர் ஒருபோதும் நம்மை மறக்காமல் இருப்பாராக !

Charles H. Spurgeon