“Gad, a troop shall overcome him: but he shall overcome at the last.” Genesis 49:19.

Some of us have been like the tribe of Gad. Our adversaries for a while were too many for us; they came upon us like a troop. Yes, and for the moment they overcame us; and they exulted greatly because of their temporary victory. Thus they only proved the first part of the family heritage to be really ours, for Christ’s people, like Dan, shall have a troop overcoming them. This being overcome is very painful, and we should have despaired if we had not by faith believed the second line of our father’s benediction, “He shall overcome at the last.” “All’s well that ends well,” said the world’s poet; and he spoke the truth. A war is to be judged, not by first success or defeats, but by that which happens “at the last.” The Lord will give to truth and righteousness victory “at the last”; and, as Mr. Bunyan says, that means forever, for nothing can come after the last.

What we need is patient perseverance in well-doing, calm confidence in our glorious Captain. Christ, our Lord Jesus, would teach us His holy art of setting the face like a flint to go through with work or suffering till we can say, “It is finished.” Hallelujah. Victory! Victory! We believe the promise. “He shall overcome at the last.” இறுதித் தேர்வுக்காகக் காத்திருங்கள்.

காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும். அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்து விழுவான். ஆதி.49:19.

நம்மில் சிலர் காத் கோத்திரத்தினரைப்போல் இருந்திருக்கிறோம். சிறிது காலம் நம் பகைவர் நம்மைவிடப் பெருத்தொகையினராய் இருந்து பெரிய பட்டாளத்தைப்போல் நம்மேல் தாக்கியிருக்கிறார்கள். ஆம், அந்நேரத்தில் நம்மை மேற்கொண்டு, சிறிது காலமே இருக்கக்கூடிய வெற்றியின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இவ்விதம் நம் குடும்ப உரிமையின் முதற்பாகத்தை உண்மையாக்கியிருக்கிறார்கள். ஏனெனில் தாண் கோத்திரத்தினரைப்போல் கிறிஸ்துவின் மக்கள்மேல் பாயும் ராணுவக்கூட்டம் வெற்றிபெறும். இவ்விதம் தோல்வியடைவது வேதனை அளிப்பதாகும். நம் பிதாவின் வாழ்த்தின் இரண்டாவது பகுதியாகிய அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்து விழுவான் என்பதை விசுவாசத்தினால் நாம் நம்பியிராவிட்டால், மனமுறிவு கொண்டிருப்போம். நன்றாய் முடிவதெல்லாம் நல்லதே என்று ஒரு கவிஞர் கூறும்போது உண்மையே கூறுகிறார். ஒரு போரின் முடிவை முதலில் ஏற்படும் வெற்றியினால் அல்லது தோல்வியினால் நிச்சயிக்கமுடியாது. முடிவிலே ஏற்படும் விளைவினாலேயே நிச்சயிக்கமுடியும். முடிவிலே ஆண்டவர் உண்மைக்கும் நீதிக்குமே வெற்றி அளிப்பார். திரு. பனியன் சொல்லுவது போல் முடிவிலே என்பது நித்திய காலத்துக்குமான முடிவைக் குறிக்கிறது. ஏனெனில் அதற்குப்பின் எதுவும் நேரிடமுடியாது.

நமக்குத் தேவையான நன்மை செய்வதில் பொறுமையும், விடாமுயற்சியும், மகிமை வாய்ந்த நம் படைத்தளபதிமேல் அமைதியான நம்பிக்கையுமேயாகும். இறுதியில் முடிந்தது அல்லேலூயா என்று சொல்லும்வரை ஒரே நோக்குடன் வேலையைச் செய்வதும், கஷ்டங்களைச் சகிப்பதும் எப்படி என்பதை நம் ஆண்டவராகிய இயேசு நமக்குப் போதிப்பார். வெற்றி! வெற்றி! அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்து விழுவான் என்னும் இந்த வாக்குறுதியை நாம் நம்புகிறோம்.

Charles H. Spurgeon