“They shall feed and lie down, and none shall make them afraid.” Zephaniah 3:13.

Yesterday we thought of the afflicted and poor people whom the Lord left to be a living seed in a dead world. The prophet says of such that they shall not work iniquity nor speak lies. So that while they had neither rank nor riches to guard them, they were also quite unable to use those weapons in which the wicked place so much reliance: they could neither defend themselves by sin nor by subtlety.

What then? Would they be destroyed? By no means! They should both feed and rest and be not merely free from danger but even quiet from fear of evil. Sheep are very feeble creatures, and wolves are terrible enemies; yet at this hour sheep are more numerous than wolves, and the cause of the sheep is always winning, while the cause of the wolves is always declining. One day flocks of sheep will cover the plains, and not a wolf will be left. The fact is that sheep have a Shepherd, and this gives them provender, protection, and peace. “None”?which means not one, whether in human or diabolical form?”shall make them afraid.” Who shall terrify the Lord’s Rock when He is near? We lie down in green pastures, for Jesus Himself is food and rest to our souls.

ஒரு மேய்ப்பர் அவர்களைப் பாதுகாப்பார்

அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள். செப்.3:13.

உயிரற்ற உலகில் உயிருள்ள விதையைப்போல் இருக்க ஆண்டவர் வைத்துள்ள வறியவர்களும் துன்பப்படுகிறவர்களுமானவர்களைக் குறித்து நேற்றுத் தியானித்தோம். அவர்கள் அநியாயம் செய்வதுமில்லை பொய் பேசுவதுமில்லை என்று தீர்க்கர் சொல்லுகிறார். அவர்களைப் பாதுகாக்க அவர்களிடம் பணமுமில்லை பதவியும் இல்லை. ஆகையால் துன்மார்க்கர் தங்களைப் பாதுகாக்கச் சார்ந்திருந்த எந்த ஆயுதத்தையும் அவர்களால் பயன்படுத்தவும் முடியவில்லை. பாவத்தினாலாவது தந்திரத்தினாலாவது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் அவர்களால் முடியவில்லை.

அப்படியானால் அவர்கள் அழிக்கப்பட்டு விடுவார்களா இல்லவேயில்லை. அவர்கள் புசித்துப் படுத்துக்கொள்வார்கள். அவர்கள் ஆபத்தில்லாமல் இருப்பதுமன்றி தீமையைக் குறித்த பயமும் இல்லாமல் அமைதியாய் இருப்பார்கள். ஆடுகள் பலவீனமான மிருகங்கள். அவைகளுக்கு ஓநாய்கள் பயங்கரமான எதிரிகள், ஆனால் இந்த நேரத்தில் ஆடுகள் ஓநாய்களை விட எண்ணிக்கையில் அதிகமாய் இருக்கின்றன. ஆடுகளின் பக்கம் வெற்றியும் ஓநாய்களின் பக்கம் தோல்வியுமே இருக்கிறது. ஒரு நாள் வயல் வெளியெங்கும் ஆடுகள் நிறைந்திருக்கும். ஒரு ஓநாய் கூடக் காணப்படமாட்டாது. இதற்குக் காரணம் என்னவென்றால் ஆடுகளுக்கு ஒரு மேய்ப்பர் இருக்கிறார். அவர் அவைகளுக்குத் தீனி பாதுகாப்பு சமாதானம் எல்லாம் அளிக்கிறார். பயப்படுத்துவாரில்லாமல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது மனிதருக்காவது மிருகங்களுக்காவது அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஆண்டவர் அருகில் இருக்கும் போது அவர் மந்தையைப் பயப்படுத்தக் கூடியவர் யார் ? நாம் புல்லுள்ள இடங்களில் படுத்துக் கொள்வோம். ஏனெனில் இயேசுவே நம் ஆன்மாவுக்கு உணவும் இளைப்பாறுதலும் ஆனவர்.

Charles H. Spurgeon