“May the Lord bless you from Zion; may you see the prosperity of Jerusalem all the days of your life.” Psalm 128:5.
This is a promise to the God-fearing man who walks in the ways of holiness with earnest heed. He shall have domestic blessedness; his wife and children shall be a source of great home happiness. But then as a member of the church he desires to see the cause prosper, for he is as much concerned for the Lord’s house as for his own. When the Lord builds our house, it is but fitting that we should desire to see the Lord’s house builded. Our goods are not truly good unless we promote by them the good of the Lord’s chosen church.
Yes, you shall get a blessing when you go up to the assemblies of Zion; you shall be instructed, enlivened, and comforted, where prayer and praise ascend and testimony is borne to the great Sacrifice. “The Lord shall bless thee out of Zion.”
Nor shall you alone be profited; the church itself shall prosper; believers shall be multiplied, and their holy work shall be crowned with success. Certain gracious men have this promise fulfilled to them as long as they live. Alas! when they die the cause often flags. Let us be among those who bring good things to Jerusalem all their days. Lord, of Thy mercy make us such! Amen.
குடும்பத்திற்கான ஆசீர்வாதம்
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார். நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய் சங்.128:5.
இது கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கும் மனிதனுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதியாகும். அவன் குடும்பம் ஆசீர்வதிக்கப்படும். அவன் மனைவியும் பிள்ளைகளும் குடும்பத்தில் மகிழ்ச்சி அளிப்பவர்களாய் இருப்பார்கள். அதோடு சபையின் அங்கத்தினாக சபையும் செழித்து வளர அவன் விரும்புகிறான். ஏனென்றால் தன்னுடைய குடும்பத்தினருக்காக அவன் கவலைப்படுவதுபோல் ஆண்டவரின் குடும்பத்துக்காகவும் கவலைப்படுகிறான். கடவுள் நம் வீட்டைக் கட்டியிருக்கும்போது அவர் வீடு கட்டப்படவேண்டுமென்று நாம் விரும்புவது சரியல்லவா? நாம் செய்யும் நன்மையான காரியங்களினால் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்ட சபை நன்மையடையாவிட்டால் அவை உண்மையாகவே நன்மையானவை அல்ல.
சீயோனின் சபையோடு ஆண்டவரைத் தொழச் செல்லும்போது நீ ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வாய். விண்ணப்பங்களும் துதி ஸ்தோத்திரங்களும் ஏறெடுக்கப்பட்டு, மகா பெரிய பலிக்கு சாட்சி கூறப்படும். அவ்விடத்தில் உனக்குப் போதனை அளிக்கப்படும். நீ உற்சாகப்படுத்தப்படுவாய். ஆறுதலும் அடைவாய். கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்.
நீ மட்டும் நன்மை அடையமாட்டாய். சபையே விருத்தியடையும். விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகும். அவர்கள் தூயபணி வெற்றிபெறும். கிருபை பொருந்தினவர்கள் சிலர் உயிரோடிருக்கும்வரை இந்த வாக்குறுதி உண்மையாய் இருக்கிறது. ஆனால் அவர்கள் மரணமடைந்ததும் மக்களின் ஊக்கம் குறைந்துவிடுகிறது. நாம் எப்போதும் எருசலேமுக்கு நற்காரியங்களைக் கொண்டு செல்பவர்களாய் இருப்போமாக. ஆண்டவரே, உம் கிருபையினால் எங்களை அப்படிப்பட்டவர்களாக்கும். ஆமென்.
Charles H. Spurgeon