“But I will rescue you on that day, declares the Lord; you will not be given into the hands of those you fear. I will save you; you will not fall by the sword but will escape with your life, because you trust in me, declares the Lord.” Jeremiah 39:17.
When the Lord’s faithful ones are suffering for Him, they shall have sweet messages of love from Himself, and sometimes they shall have glad tidings for those who sympathize with them and help them. Ebed-melech was only a despised Ethiopian, but he was kind to Jeremiah, and so the Lord sent him this special promise by the mouth of His prophet. Let us be ever mindful of God’s persecuted servants, and He will reward us.
Ebed-melech was to be delivered from the men whose vengeance he feared. He was a humble… man, but Jehovah would take care of him. Thousands were slain by the Chaldeans, but [he] could not be hurt. We, too, may be fearful of some great ones who are bitter against us; but if we have been faithful to the Lord’s cause in the hour of persecution, He will be faithful to us. After all, what can a man do without the Lord’s permission? He puts a bit into the mouth of rage and a bridle upon the head of power. Let us fear the Lord, and we shall have no one else to fear. No cup of cold water given to a despised prophet of God shall be without its reward; and if we stand up for Jesus, Jesus will stand up for us.
பூரண விடுதலை
ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. எரே.39:17.
ஆண்டவருக்காக அவருடைய உண்மையான ஊழியக்காரர் துன்பப்படும்போது அவரிடமிருந்து அன்பும் இனிமையுமான செய்திகளைப் பெறுவார்கள். அவர்கள் மேல் பரிவும் இரக்கமும் கொண்டு அவர்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு அறிவிக்கவும் நற்செய்தியைப் பெறுவார்கள். ஏபெத்மெலேக்கு இழிவாகக் கருதப்பட்ட ஒரு எத்தியோப்பியரே ஆனால் அவர் எரேமியாவுக்கு இரக்கம் காட்டினார். ஆகையால் தீர்க்கதரிசி மூலமாக அவருக்கு இச்சிறப்பான வாக்குறுதியைக் கடவுள் அனுப்பினார். கடவுளுக்காகத் துன்பப்படுகிறவர் மேல் நாம் எப்போதும் அக்கறை உள்ளவர்களாக இருப்போமாக. அவர் நமக்குப் பலன் அளிப்பவர்.
தம்மேல் பழிவாங்கக் காத்திருந்தவர்களைக் குறித்து எபெத்மெலேக்கு அச்சம் கொண்டிருந்தார். ஆனால் அவர்களிடமிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்னும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அவர் தாழ்மையும் எளிமையும் ஆனவர். ஆனால் யேகோவா அவரைக் காத்துப் பேணினார். ஆயிரக்கணக்கானவர்களை வெட்டிக்கொன்ற போதிலும் அவர்களால் அடக்கவொடுக்கமான அந்த எத்தியோப்பியருக்கு எவ்விதத் தீங்கும் செய்யமுடியவில்லை. நம்மேல் விரோதம் கொண்டிருக்கும் பலரைக் குறித்து நாமும் அச்சம் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் துன்பப்படும் போது ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால் அவர் நம்மைக் குறித்து உண்மையுள்ளவராய் இருப்பார். ஆண்டவரின் உத்தரவு இல்லாமல் யார் என்ன செய்ய முடியும்? ஆண்டவர் கோபம் கொண்டவரின் வாயையும் வலிமை வாய்ந்தவரின் தலையையும் கடிவாளத்தால் அடக்குவார். நாம் கடவுளுக்குப் பயப்படலாம் வேறு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. கடவுளுக்காக இகழப்பட்ட ஒரு தீர்க்கதரிசிக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுப்பவனும் அதற்கான பலனை அனுபவிக்காமற் போவதில்லை. நாம் இயேசுவுக்காக அக்கறை கொண்டால் இயேசு நமக்காக அக்கறை கொள்வார்.
Charles H. Spurgeon.