“And a man shall be as an hiding-place from the wind and a covert from the tempest.” Isaiah 32:2.
Who this Man is we all know. Who could He be but the Second Man, the Lord from heaven, the man of sorrows, the Son of Man? What a hiding place He has been to His people! He bears the full force of the wind Himself, and so He shelters those who hide themselves in Him. We have thus escaped the wrath of God, and we shall thus escape the anger of men, the cares of this life, and the dread of death. Why do we stand in the wind when we may so readily and so surely get out of it by hiding behind our Lord? Let us this day run to Him and be at peace.
Often the common wind of trouble rises in its force and becomes a tempest, sweeping everything before it. Things which looked firm and stable rock in the blast, and many and great are the falls among our carnal confidences. Our Lord Jesus, the glorious man, is a covert which is never blown down. In Him we mark the tempest sweeping by, but we ourselves rest in delightful serenity.
This day let us just stow ourselves away in our hiding place and sit and sing under the protection of our Covert. Blessed Jesus! Blessed Jesus! How we love Thee! Well we may, for Thou art to us a shelter in the time of storm.
மிகவும் பத்திரமான ஒதுக்கிடம்
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும் பெரு வெள்ளத்துக்குப் புகலிடமாகவும்………இருப்பார். ஏசா.32:2.
அவர் யாரென்று நம்மெல்லோருக்கும் தெரியும். இரண்டாவது மனிதனானவரும் பரலோகத்திலிருந்து வந்த ஆண்டவரும் மனுஷ குமாரனுமானவரைத் தவிர அவர் வேறு யாராயிருக்க முடியும்? அவர் தம் பிள்ளைகளுக்கு எவ்வளவு சிறந்த ஒதுக்கிடமாய் இருந்திருக்கிறார். காற்றின் முழு வேகத்தையும் அவர் தாங்கிக் கொண்டு அவரில் மறைந்து கொள்ளுகிறவர்களுக்கு ஒதுக்காயிருக்கிறார். இவ்விதமான கடவுளின் கோபத்துக்கு நாம் தப்பித்திருக்கிறோம். இவ்விதமாகவே மனிதரின் கோபத்துக்கும் இவ்வாழ்க்கையின் கவலைகளுக்கும் மரணபயத்துக்கும் தப்புவோம். ஆண்டவரின் பின் மறைந்து நின்றால் உடனடியாகவும் நிச்சயமாகவும் காற்றின் வேகத்துக்குத் தப்புவிக்க முடியும்போது நாம் ஏன் காற்றில் நின்று அல்லல் படவேண்டும்? இன்று அவரிடம் ஓடி சமாதானமாய் இருப்போமாக!
பொதுவாக தொல்லை என்னும் காற்று வலுவடைந்து புயலாகி அதன் முன்னுள்ள எல்லாவற்றையும் வாரிக் கொண்டு சென்று விடுகின்றது. உறுதியாயும் திடமாயும் காணப்பட்டவை அதன் வலிமையால் ஆட்டங் கண்டு விடுகின்றன. இம்மையின் வாழ்வுக்காகவும் நாம் நம்பியிருந்தவை பல வீழ்ச்சியடைந்து விடுகின்றன. நம் ஆண்டவராகிய இயேசு மகிமை பொருந்திய மனிதனாவர் ஒரு நாளும் காற்று வீசித்தள்ள முடியாத ஒதுக்கிடம் போன்றவர். எல்லாவற்றையும் வாரிக்கொண்டு போகும் புயலை அவரில் பதிவு செய்கிறோம் ஆனால் நாம் மகிழ்ச்சி நிறைந்த அமைதி உள்ளவர்களாய் இருக்கிறோம்.
இந்த நாளிலே நாம் மறைவிடத்தில் ஒளிந்திருந்து அதன் பாதுகாப்பில் அமர்ந்து பாடி மகிழுவோமாக! இன்ப வாழ்வுக்குரியவரான இயேசுவே நாங்கள் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறோம்! அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் புயல் வீசும்போது நீர் எங்களுக்கு ஒதுக்கிடமாய் இருக்கிறீர்.
Charles H. Spurgeon