“And of Benjamin he said, The beloved of the Lord shall dwell in safety by him; and the Lord shall cover him all the day long, and he shall dwell between his shoulders.” Deuteronomy 33:12.
Yes, there is no safety like that which comes of dwelling near to God. For His best beloved the Lord can find no surer or safer place. O Lord, let me always abide under Thy shadow, close to Thy wounded side. Nearer and nearer would I come to Thee, my Lord; and when once specially near Thee, I would abide there forever.
What a covering is that which the Lord gives to His chosen! Not a fair roof shall cover him, nor a bomb-proof casement, nor even an angel’s wing, but Jehovah Himself. Nothing can come at us when we are thus covered. This covering the Lord will grant us all the day long, however long the day. Lord, let me abide this day consciously beneath this canopy of love, this pavilion of sovereign power.
Does the third clause mean that the Lord in His temple would dwell among the mountains of Benjamin or that the Lord would be where Benjamin’s burden should be placed, or does it mean that we are borne upon the shoulders of the Eternal? In any case, the Lord is the support and strength of His saints. Lord, let me ever enjoy Thy help, and then my arms will be sufficient for me.
முழுப் பாதுகாப்பு
பென்யமீனைக் குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான். அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றார். உபா.33:12.
கடவுளோடு நெருங்கி வாழ்வதன் பயனாய்க் கிடைக்கும் பாதுகாப்புப் போல சிறந்தது வேறெதுவுமில்லை. அவருக்கு மிக அருமையானவனுக்கு ஆண்டவர் அதைப்போன்ற உறுதி வாய்ந்ததும் பாதுகாப்பானதுமான வேறு இடம் கண்டுபடிக்க முடியாது. ஆண்டவரே நான் அப்போதும் உம் நிழலில் காயமடைந்த உம் உடலின் பாகத்தில் நெருங்கி வாழ உதவி செய்யும். ஒரு முறை சிறப்பாக உம் அருகில் இருந்தால் அங்கேயே எப்போதும் நிலைத்திருப்பேன்.
தாம் தெரிந்தெடுக்கிறவர்களுக்கு ஆண்டவர் அருளும் பாதுகாப்பு எப்படிப்பட்டதென்று பாருங்கள். நல் ஆதரவான கூரை அல்லது குண்டு ஊடுருவாத பாதுகாப்பறை அல்லது தேவதூதனின் இறக்கை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை. யேகோவாவே அவர்களை மூடிக் காப்பாற்றுவார். அவ்விதம் மூடப்பட்டிருக்கும் போது எதுவும் நம்மைத் தாக்க முடியாது. ஒருநாளுக்கு எத்தனை மணிநேரம் இருந்தாலும் நாள் முழுவதும் ஆண்டவர் நம்மை மூடியிருப்பார். ஆண்டவர் இந்த நாளில் நான் மனமார இவ்விதமான அன்பின் பாதுகாப்பிலும் உம் ஆற்றலின் பாதுகாப்பிலும் இருப்பேனாக!
மேலே கூறப்பட்ட வாக்குறுதியின் மூன்றாம் பகுதி ஆண்டவர் பென்யமீனின் மலைகளுக்கு ஊடே தம் ஆலயத்தில் வாசம் பண்ணுவார் என்பதைக் குறிக்கிறதா? அல்லது பென்யமீனின் பாரம் வைக்கப்படும் இடத்தில் இருப்பார் என்பதைக் குறிக்கிறதா? எதுவாயினும் ஆண்டவர் தம் பரிசுத்தவான்களின் ஆதரவும் பெலனுமானவர் என்பது நிச்சயம். ஆண்டவரே உம் உதவி எனக்குக் கிட்டுவதாக. அப்படியானால் என் ஆற்றலே எனக்குப் போதுமானது.
Charles H. Spurgeon