“He will cover you with his feathers, and under his wings you will find refuge; his faithfulness will be your shield and rampart.” Psalm 91:4.
A condescending simile indeed! Just as a hen protects her brood and allows them to nestle under her wings, so will the Lord defend His people and permit them to hide away in Him. Have we not seen the little chicks peeping out from under the mother’s feathers? Have we not heard their little cry of contented joy? In this way let us shelter ourselves in our God and feel overflowing peace in knowing that He is guarding us.
While the Lord covers us, we trust. It would be strange if we did not. How can we distrust when Jehovah Himself becomes house and home, refuge and rest to us?
This done, we go out to war in His name and enjoy the same guardian care. We need shield and buckler, and when we implicitly trust God, even as the chick trusts the hen, we find His truth arming us from head to foot. The Lord cannot lie; He must be faithful to His people; His promise must stand. This sure truth is all the shield we need. Behind it we defy the fiery darts of the enemy.
Come, my soul, hide under those great wings, lose thyself among those soft feathers! How happy thou art!
மூடி பாதுகாப்பு அளிப்பார்
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின்கீழே அடைக்கலம் புகுவாய். அவருடைய சத்தியம் பரிசையும் கேடகமுமாகும். சங்.91:4.
இது கருணை நயம்படச் செயலாற்றும் உவமையாகும். ஒரு கோழி எவ்விதம் தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளாலே மூடி, அவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறதோ, அவ்விதம் ஆண்டவர் தம் மக்களைப் பாதுகாத்து, அவர்கள் தம்மில் அடைக்கலம் புகச் செய்வார். தாய்க் கோழியின் சிறகுக்குள்ளிருந்து குஞ்சுகள் வெளியே எட்டிப் பார்ப்பதை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா? அவை திருப்தியடைந்து மகிழ்ச்சியுடன் செய்யும் சத்தத்தையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்விதமாக நாமும் கடவுளில் அடைக்கலம் தேடி, அவர் நம்மைப் பாதுகாத்து வருகிறார் என்று உணர்வோமாக!
ஆண்டவர் நம்மை மூடியிருக்கும்வரை நாம் நம்பிக்கை உடையவர்களாயிருக்கிறோம். அவ்விதம் இல்லாமல் இருப்பதுதான் எதிர்பாராத நிலையாகும். யேகோவா நம் வீடும், குடும்பமும், அடைக்கலமும், இளைப்பாறுதலுமாய் இருக்கும்போது நாம் எவ்விதம் நம்பிக்கை அற்று இருக்கமுடியும்?
இவ்விதம் நம்பினபின்பு அவர் நாமத்தில் போருக்குச் சென்று, அதே பாதுகாப்பை அனுபவிக்கிறோம். நமக்குப் பரிசையும் கேடகமும் தேவை. ஆனால் நாம் குஞ்சு, கோழியை நம்புவதைப்போல ஐயம் இல்லாத உறுதிப்பாடுடன் கடவுளை நம்பும்போது அவர் உண்மை நமக்குத் தலையிலிருந்து கால்வரை கவசம்போல இருப்பதைக் காண்போம். ஆண்டவர் பொய்சொல்லமாட்டார். அவர் தம் மக்களுக்கு உண்மையுள்ளவராயிருப்பார். அவர் வாக்குறுதிகளில் நிலைத்திருக்கவேண்டும். நமக்குத் தேவையானது இந்த உண்மையாகிய பரிசையே. அதன் மறைவில் இருந்து நாம் எதிரிகளின் பயங்கரமான அம்புகளை எதிர்த்துநிற்கிறோம்.
என் ஆன்மாவே, அந்தப் பெரிய சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுந்துகொள். பஞ்சைப்போன்ற இறகுகளின் மத்தியில் அமர்ந்திரு. நீ மகிழ்ச்சி உள்ளவனாய் இருக்கிறாய் அல்லவா?
Charles H. Spurgeon