If you declare with your mouth, “Jesus is Lord,” and believe in your heart that God raised him from the dead, you will be saved. Romans 10:9.

There must be confession with the mouth. Have I made it? Have I openly avowed my faith in Jesus as the Savior whom God has raised from the dead, and have I done it in God’s way! Let me honestly answer this question.

There must also be belief with the heart. Do I sincerely believe in the risen Lord Jesus? Do I trust in Him as my sole hope of salvation? Is this trust from my heart? Let me answer as before God.

If I can truly claim that I have both confessed Christ and believed in Him, then I am saved. The text does not say it may be so, but it is plain as a pikestaff and clear as the sun in the heavens: “Thou shalt be saved.” As a believer and a confessor, I may lay my hand on this promise and plead it before the Lord God at this moment, and throughout life, and in the hour of death, and at the Day of Judgment.

I must be saved from the guilt of sin, the power of sin, the punishment of sin, and ultimately from the very being of sin. God hath said it?”Thou shalt be saved.” I believe it. I shall be saved. I am saved. Glory be to God forever and ever!

வாயினால் அறிக்கையிடுதல், இருதயத்தில் விசுவாசித்தல்

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9).

நான் வாயினாலே அறிக்கையிட வேண்டும். நான் அவ்விதம் அறிக்கையிட்டிருக்கிறேனா? கடவுள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின இரட்சகர் இயேசுவே என்று அவரில் என் நம்பிக்கையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறேனா? கடவுள் எதிர்பார்க்கும் விதத்தில் ஒப்பக்கொண்டிருக்கிறேனா? இவ் வினாக்களுக்கு உண்மையாக விடை அளிப்பேனாக !

இருதயத்தில் விசுவாசித்தலும் அவசியம் என்று மேலே கூறப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவில் நான் மனமார நம்பிக்கை வைத்துள்ளேனா? நான் இரட்சிக்கப்படுவதற்கு அவர் ஒருவரே நம்பிக்கை என்று அவரில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா? இது என் உள்ளத்திலிருந்து தோன்றும் விசுவாசமா? கடவுளுக்கு முன்பாக விடையளிப்பதாக எண்ணி உண்மையாக விடையளிப்பேனாக.

நான் கிறிஸ்துவை அறிக்கையிட்டு அவரில் விசுவாசித்திருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். தலைப்பில் கூறப்பட்டுள்ள வாக்கியம் நான் இரட்சிக்கப்படலாம் என்று சொல்லவில்லை. வானத்தில் சூரியன் எவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறதோ அதைப்போல் மிகத் தெளிவாக இரட்சிக்கப்படுவாய் என்று கூறுகிறது. நான் விசுவாசியாகவும், அறிக்கையிடுகிறவனாகவும் இந்த வாக்குறுதியை எனக்குரியதாக ஏற்று, இப்போதும், வாழ்க்கை முழுவதும், மரணமடையும்போதும், நியாத்தீர்ப்பு நாளிலும் கடவுளின் சமூகத்தில் நின்று மன்றாடலாம்.

பாவத்தின் பழியிலிருந்தும், ஆற்றலிலிருந்தும், தண்டனையிலிருந்தும், இறுதியாகப் பாவத்திலுமேயிருந்து நான் இரட்சிக்கப்படவேண்டும். நீ இரட்சிக்கப்படுவாய் என்று கடவுள் கூறியிருக்கிறார். நான் அதை நம்புகிறேன். நான் இரட்சிக்கப்படுவேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். சதாகாலங்களிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக.

Charles H. Spurgeon