“He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things?” Romans 8:32.
If this is not a promise in form, it is in fact. Indeed, it is more than one promise, it is a conglomerate of promises. It is a mass of rubies, and emeralds, and diamonds, with a nugget of gold for their setting. It is a question which can never be answered so as to cause us any anxiety of heart. What can the Lord deny us after giving us Jesus? If we need all things in heaven and earth, He will grant them to us: for if there had been a limit anywhere, He would have kept back His own Son.
What do I want today? I have only to ask for it. I may seek earnestly, but not as if I had to use pressure and extort an unwilling gift from the Lord’s hand; for He will give freely. Of His own He gave us His own Son. Certainly no one would have proposed such a gift to Him. No one would have ventured to ask for it. It would have been too presumptuous. He freely gave His Only-begotten, and, O my soul, canst thou not trust thy heavenly Father to give thee anything, to give thee everything? Thy poor prayer would have no force with Omnipotence if force were needed; but His love, like a spring, rises of itself and overflows for the supply of all thy needs.
அவர் இலவசமாகக் கொடுக்கிறார்
தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோ.8:32).
இது ஒரு வாக்குறுதி போல் காணப்படாவிட்டாலும் இதுவும் ஒரு வாக்குறுதிதான். ஒருவாக்குறுதி மட்டுமல்ல. பல வாக்குறுதிகளின் திரட்டு ஆகும். பல செம்புக் கற்களும், மரகதக் கற்களும், வைரக்கற்களும் தங்கத்தில்ப் பதிக்கப்பட்டுள்ளதைப் போன்ற விலையேறப்பெற்ற வாக்குறுதியாகும். இது நமக்கு எந்தக் கவலையும் ஏற்படாதவாறு ஒருநாளும் விடையளிக்கப்படாத வினா ஆகும். நம் ஆண்டவர் நமக்காக இயேசுவையே கொடுத்தபின் வேறு எதையாவது கொடுக்க மறுப்பாரா? இவ்வுலகிலும் மேல் உலகிலும் நமக்குத் தேவையானவற்றையெல்லாம் அவர் அருளுவார். ஏனெனில் அவர் அளிப்பதற்கு ஓர் எல்லை இருந்திருக்குமேயானால் தம் சொந்தக் குமாரனை அளிக்காமல் இருந்திருப்பார்.
இன்று எனக்கு என்ன வேண்டும்? அது வேண்டுமென்று நான் கேட்டால் போதும் நான் அதை அக்கறையோடு நாடிச்செல்ல வேண்டியதிருக்கலாம். ஆனால் ஆண்டவர் கொடுக்க விரும்பாத ஒன்றை கட்டாயப்படுத்தியும் வற்புறுத்தியும் பெறவேண்டியதிருக்காது. ஏனெனில் அவர் இலவசமாகக் கொடுப்பார். அவர் தாமாகத் தானே தம் சொந்தக் குமாரனை இலவசமாக அருளினார். அந்த ஈவை யாரும் குறிப்பிட்டுக் கேட்டிருக்கமாட்டார்கள். அதைக் கேட்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள். அவ்விதம் கேட்டிருந்தால் அது வரம்பு மீறியதாய் இருந்திருக்கும். அவர் இலவசமாகத் தாமாகவே தம் ஒரே பேறான குமாரனை அருளினார். ஆகையால் என் ஆன்மாவே, நீ நம் பரமபிதா எல்லாவற்றையும் கொடுப்பார் என்று அவரை நம்ப முடியாதா? எதையும் பெறுவதற்கு உன்னில் வலிமை தேவை என்றால் குறைபாடுடைய உன் வேண்டுதல் எல்லாம் வல்ல கடவுளை வற்புறுத்த முடியாது. ஆனால் அவருடைய அன்பு உன்னுடைய தேவைகளையெல்லாம் நிறைவு செய்ய நீரூற்று போல் எழும்பி, பொங்கி வழிந்தோடும்.
Charles H. Spurgeon